உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)
மே 4, 1886 அன்று, சிக்காகோவில் தொழிலாளர்கள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் எட்டு மணி நேர வேலை கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர், பொலீசாரின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டு, எட்டு மணி நேர வேலை நாளை யதார்த்தமாக்க தங்கள் உயிர்களையும் உடல்களையும் ஈகம் செய்தனர். இலங்கையில் நாம் எட்டு மணி நேர வேலை விதிப்பை அனுபவிப்பது எங்கள் முன்னோடிகளின் போராட்டங்கள் மற்றும் ஈகங்களின் விளைவாகவே. உழைக்கும் மக்கள் என்ற வகையில் எங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அது மாறியது. ஒற்றை வேலைவாய்ப்பு சட்டம் என்ற போர்வையில், எட்டுமணி நேர வேலைக்கு ஆப்பு வைக்கும் நோக்கில், ஈகத்தால் வென்ற தொழிலாளர் உரிமைகளை கிழித்தெறியும் புதிய தொழிலாளர் சட்டத்தை அரசும் முதலாளிகளும் வரையும் நிலை மீளுருவாக்கம் பெறுகிறது.
இம் மே தினத்தில், உழைக்கும் மக்களாகிய நாமும் எமது குடும்பங்களும் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஜனாதிபதி, பாராளுமன்றம், அரசு ...









