தேர்வு மட்டும் தான் தீர்வா?? அறிவு சார் ஆன்றோர்களே….தீர்வு காணுங்கள்.. அந்த வருடம்..1997-98. சட்ட பட்டப்படிப்பு தேர்வு… முதலாம் பருவ நிலை..(first semester) நாங்கள் எண்பது மாணவர்கள் மொத்தம்.. தேர்வு முடிவுகள் வெளிவந்தது. நாங்கள் எண்பது பேரில் ஆறு பேர் மட்டுமே முழுமையாக தேர்ச்சி பெற்றனர்… மற்ற அனைவருக்கும் அரியர்… நானும் ஆறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவியுமாக தேர்ச்சி பற்றிய தகவல்கள் அறிய பேராசிரியர்கள் அறைக்கு சென்றோம்.. என்னுடன் வந்த மாணவியிடம் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர்…இதோ பாருங்க (பெயரை அழைத்து) நீங்க எழுதிய ஒரு தேர்வில் வெறும் 20 மார்க் மட்டுமே வாங்கி இருந்தீர்கள்… நான் தற்செயலாக நீங்கள் எழுதிய மை வைத்து (Darquis blue) உங்கள் தேர்வு தாளை அடையாளம் தெரிந்து 44 மார்க் போட்டு பாஸ் செய்தேன் என்றார்.. இதனை கேட்டதும்…