பொது மக்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் பொலிஸாரின் பங்கு தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இளம் சட்டத்தரணிகள் சங்கம் கோருகிறது.
வன்முறை வன்முறைக்கு வழி வகுக்கும். இன்று எமது மக்கள் மீது அவிலழ்த்துவிடப்படும் பொருளாதார வன்முறை வன்முறையாக வெடிக்கும். நீதித்துறை ஒரு விதமான வன்முறையை கண்டித்து பொருளாதார வன்முறை மீது அமைதி காக்க முடியாது. எனவே இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஆகிய நாங்கள் பொருளாதார மற்றும் அரச வன்முறையினால் பாதிக்கப்பட்டோருக்கு எமது முழு ஆதரவையும் வழங்குவதுடன் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் அரசியல் அலட்சியத்திற்கு எதிராக தொடர்சியாக குரல் கொடுப்போம்.