பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் தற்போது மாற்றுக்கருத்துக்களைக் கொண்டோரையும் இலக்கு வைக்க பயன்படுவதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அதன் பிரயோகத்தை தடைசெய்வதற்கான…