அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகும் – சுதந்திர ஊடக இயக்கம்

தான் வெளியிட்ட கூற்று தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாத் சாலி, சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தமையானது அரசியல் அதிகாரங்கள்(பலம்வாய்ந்தவர்கள்) சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாட்டின் ஒரு நிகழ்வாகும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ICCPR சட்டத்தைப் மேற்கோள்காட்டி  தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலியின் மீது நீதிமன்றத்தில் முன் 
குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிணை வழங்கப்படாத காரணத்தினால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் பல சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக செயற்பட்டாளர்களை அரசியல் அதிகாரங்களின் சட்ட சீர்கேடுகள் (சட்ட துஷ்பிரயோகம்) காரணமாகச் அநீதியான வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள்குறித்த சமூகத்தின் மத்தியில் காணப்படும் கருத்துக்கள் தொடர்பில் அரசு தனது கவனத்தை செலுத்தவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

அசாத் சாலி கைது செய்யப்பட்ட சந்தர்பத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களில் அசாத் சாலியின் கைது நடவடிக்கையை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அனைத்து சம்பவங்களையும் கூர்ந்து அவதானிக்கும்போது, அரசியல் அதிகாரத்திற்காக எந்த வித தயக்கமோ கூச்சமோ இன்றிசட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய இந்நாட்டு அரசியல் பலம்வாய்ந்தவர்கள் முனைகின்றமை தெட்டத்தெளிவாககே கண்டுகொள்ளமுடியுமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளின் வளர்ச்சிப்போக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாகவும் மற்றும் கருத்துச்சுதந்திரத்திற்கு சவாலாகவும் அமைய கூடும் என சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது, மேலும் இது தொடர்பில் வெளிப்படையான மற்றும் பரந்த சமூகக் கருத்தாடல்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்துகிறது.

Loading

Related posts