நினைவு வணக்கம்!

திருநாவுக்கரசர் வல்லிபுரம்!

நினைவு வணக்கம்!

திருநாவுக்கரசர் வல்லிபுரம்!

நாவுக்கரசர் 

பெயரின் நிகர்த்த

நாவிலே அரசர்.

நேர் பார்வையில்

நிமிராத

பணிவில்

மனதைத் தொடும்

மனித நேயர். 

இரும்பின் கனதியும்

கரும்பின் இனிமையும் 

சொல்லில்

பொருளாய் சுவையாய்

துய்த்த ஞாபகங்கள்

பல.

பார்த்த மாத்திரத்தில்

பண்பால்

பணிய வைக்கும்

பக்குவம் பார்த்து வியந்த பொழுதுகளும்

எத்தனையோ நினைவில்.

நல்லொழுக்கம் எனும்

ஒரு சொல்லில்

ஆளுகை செய்யும்

அன்பாளர்

எனில் மிகையல்ல.

பேச்சில் அளவு கோல் மேலாய்

ஒரு சொல்லும்

பிறளாத

சிறப்பியல்பில் உள்ளம்

உவகையுற்ற

நிகழ்வுள் பல.

அருகருகே வாழ்ந்த

அந்நாளில்

மருந்துக்கும் குரலில்

கனியன்றி

ஒரு காய்ச் சொல்

தொனித்ததில்லை.

கால நீட்சியின் பின்னும்

காணக் கிடைத்த வேளைகளில்

அமுத மொழி கொண்டு

ஆரத்தழுவிய சிலிர்ப்பு

இன்னமும்

உள்ளூறச்

சில்லிடுகினறது.

தன் மகிமை விடுத்து

பிறர் பெருமையில்

இன்புறும்

ஒப்பற்ற அண்ணலுடன்

விருந்துண்ட

வேளைகள்

விளம்பும் தரனற்றவையே.

எழுதிக்கொண்டே

செல்லும்

இயற்கையின்

ஏட்டில்

இன்று உங்கள் பெயர்.

வானுறை தெய்வ 

வரவேற்பாகலாம்.

வருக சென்று!

Loading

Related posts