தேர்வு மட்டும் தான் தீர்வா??

தேர்வு மட்டும் தான் தீர்வா??

அறிவு சார் ஆன்றோர்களே….தீர்வு காணுங்கள்..

அந்த வருடம்..1997-98. சட்ட பட்டப்படிப்பு தேர்வு… முதலாம் பருவ நிலை..(first semester)

நாங்கள் எண்பது மாணவர்கள் மொத்தம்..

தேர்வு முடிவுகள் வெளிவந்தது.

நாங்கள் எண்பது பேரில் ஆறு பேர் மட்டுமே முழுமையாக தேர்ச்சி பெற்றனர்… மற்ற அனைவருக்கும் அரியர்…

நானும் ஆறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவியுமாக தேர்ச்சி பற்றிய தகவல்கள் அறிய பேராசிரியர்கள் அறைக்கு சென்றோம்..

என்னுடன் வந்த மாணவியிடம் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர்…இதோ பாருங்க (பெயரை அழைத்து) நீங்க எழுதிய ஒரு தேர்வில் வெறும் 20 மார்க் மட்டுமே வாங்கி இருந்தீர்கள்… நான் தற்செயலாக நீங்கள் எழுதிய மை வைத்து (Darquis blue) உங்கள் தேர்வு தாளை அடையாளம் தெரிந்து 44 மார்க் போட்டு பாஸ் செய்தேன் என்றார்..

இதனை கேட்டதும் என் அதிர்ச்சி அளவிட முடியவில்லை… நான் அவரிடம் இது மிகவும் தவறான ஒன்று சார்..

அதுவும் உங்களிடம் இருந்து இந்த அருவெறுப்பாக செயலை எதிர் பார்க்கவில்லை என்றேன்… என் கோபம் அவர் எதிர் பார்க்கவில்லை… மெதுவாக சசிகலா தப்பாக நினைக்காதீர்கள்…நம்ம காலேஜ் மாணவி என்று இழுத்தார்…

சார் நமம மாணவி என்று தெரிந்த உங்களுக்கு ஏன் மற்ற மாணவர்கள் நினைவுக்கு வரவில்லை… இத்தகைய உங்கள் செயல் எங்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று ஏன் தெரியவில்லை… என்ன சொன்னாலும் நீங்கள் செய்தது சீரணிக்க முடியாது சார்… நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு… மரியாதை இவையெல்லாம் விட நம்பிக்கை போயிற்று சார் என்றேன்…

ஆனாலும் அவர் சசிகலா நான் மிகவும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல எனக்கு இன்னும் அதிகமாக கோபம்..

சார் எல்லோரும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படி செய்தது தவறு என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தேன்…

இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் ஆயிற்று என்றாலும் என் மனதில் வேதனை தருகிறது….இது போல் தானே இளம் தலைமுறையினர் கூட இந்த மதிப்பெண் பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்…

சரியான நபர்களின் உண்மையான திறமை மறைக்கப் படுகிறது அல்லது குறைக்கப் படுகிறது…

குறிப்பாக நீட் தேர்வு…

நான் கூறிய பேராசிரியர் இன்று உச்ச பதவியில் இருக்கிறார்..

அவரோடு பேசும் போதெல்லாம் இந்த சம்பவத்தை கூறுவேன்… ஒரு முறை அவர் கேட்டார்… சரி அந்த மாணவியின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்… நான் ஒரு வேளை நீங்கள் குறைவாக மார்க் வாங்கி நான் உங்களை அதிகமாக மார்க் போட்டு பாஸ் செய்தேன் என்றால் என்ன செய்து இருப்பீர்கள் என்றார்..

அப்படி நீங்கள் செய்து எனக்கு தெரிய வந்தால் வினாத்தாள் மறு திருத்தத்திற்கு தருவேன்… இன்னும் அதிகமாக போனால் இந்த படிப்பே வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என்றேன்..

இதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது…

கல்வியாளர்களே… இளம் தலைமுறையினரின் நலம் சார்ந்து எதாவது ஒரு மாற்று கொண்டு வாருங்கள்…

மீள் பதிவு…

By Sashikala Devi Sulaiman –

Tamilnadu India ( Advocate)

Loading

Related posts