செவ்வணக்கம்!
#செவ்வஞ்சலி!
பள்ளியில் படிக்கின்ற 15 வது வயதிலேயே ஒரு போராளியாக ரூபம் கொண்டு, பின் போராளி வாழ்க்கையையே தன் சொந்த வாழ்க்கையாக மாற்றி, 83 வயது வரை வாழ்ந்து வந்த இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவரான தோழர் சுதாகர் ரெட்டி தன் மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நம்மிடமிருந்து பிரியாவிடை வாங்கியிருக்கிறார்.

வீரஞ்செறிந்த ஆந்திர மண்ணில்
பிறந்து, உழைக்கும் மக்களுக்காக நடந்த உன்னதமான போராட்டங்களால் புடம்போட்டு எடுக்கப்பட்டு, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்

திறம்பட செயல்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர் தோழர் சுதாகர் ரெட்டி.
2012 முதல் 2019 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக அரும் பணியாற்றிய தோழர் சுதாகர் ரெட்டி, பொதுச் செயலாளர் பொறுப்பைத் துறந்த பிறகும், தொடர்ந்து உழைக்கும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும்
போராடி வந்த ஒரு பெரும் தலைவர்.
68 ஆண்டுக்கால அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான தோழர் சுதாகர் ரெட்டியின் வாழ்வும் சிந்தனையும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை எந்நாளும் வழிகாட்டும் வல்லமை மிக்கவை.
செவ்வணக்கம்! செவ்வஞ்சலி!
Paying our High Tribute and Red Salutes to the sudden demise of our Veteran Communist Fighter and Leader. Com. SUDHAKAR.
REDDY..!!
R.Sevvilam Parithi
Advocate.
General Secretary
Tamilnadu Festival Hawkers. and Street Vendors Federation Tamilnadu. 22.08.2025