
அன்றே சொன்ன தீர்க்க தரிசி,
தோழர் எஸ்.ஏ.எஸ்.ஏ.டாங்கே.
அன்று, தோழர் எஸ்.ஏ.டாங்கே சொன்னது,
இன்று உண்மையாகியிருக்கிறதா?இல்லையா?
லெனினால் வாசிக்கப்பட்ட , (லெனின் படிப்பறையில் இன்றும் உள்ள) ,நூலை, தனது 21-வது வயதிலேயே,”காந்தி vs லெனினும்”என நூல் எழுதியவர் தோழர் எஸ்.ஏ.டாங்கே!
உலகிலேயே உயர்வாகக் கருதப்பட்ட Oder of Lenin (லெனின் விருது) வழங்கி கௌரவிக்கப்பட்ட தலைவர் எஸ்.ஏ.டாங்கே!
உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட தோழர் எஸ்.ஏ.டாங்கே!
ஏஐடியுசி யின் வர்க்கப் போராட்ட சரித்திரத்தில்,முத்திரை பதித்த தோழர் தலைவர் தோழர் எஸ்.ஏ.டாங்கே!
கான்பூர் சதி வழக்கு,மீரட் சதி வழக்கு, போருக்கு எதிரான குற்றங்கள்…
என 16(பதினாறு) ஆண்டுகாலம் சிறைவாசத்தை ஏற்றவர் தோழர் எஸ்.ஏடாங்கே.
‘எந்தப் பேயோடு சேர்ந்தும் காங்கிரசை ஒழிப்போம்’ என்று முழங்கியவர்களும் கூட, காங்கிரஸ் உடன் அணி சேர்ந்தது, சேர்வது இன்றைய காலம்!
இது,
தோழர் எஸ்.ஏ.டாங்கேவுக்கு இந்தியாவே வழங்குகிற ரெட் சல்யூட் என்று சொல்லலாம்!
அல்லாமல் வேறு என்ன?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை
தோற்றுவித்த,
உலக தொழிற்சங்க சம்மேளனத்தை ( WFTU) தோற்றுவித்த தலைவர்களில் ஒருவருமான, தொழிலாளி வர்கத் தலைவன், மக்கள் தலைவன் எஸ்.ஏ.டாங்கே.
நினைவு நாள் மே 22 1992-(10.10.1899)
செவ் வணக்கம் தோழர் எஸ்.ஏ.டி!
செவ் வணக்கம்!
-வீ.வெள்ளிங்கிரி.