இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை 1938 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்ட தொழிலாளர்களின் முதலவாது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அதே ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை நிறுத்தம் சில நாட்கள் நீடித்த நிலையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் மேலும் பதிவு செய்துள்ளது. அன்று முதல் 86 வருடங்களாக தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வந்த றப்பர் தோட்ட தொழிலாளர்கள் அன்று சிந்திய கண்ணீருக்கான விலை அன்றைய நாளை விட இன்று அதற்கான பெறுமதி கூடியுள்ளதா. காலனித்துவ ஆட்சியாளர்களினால் இந்நாட்டிற்கு முதலாவதாக கோப்பி பயிர்ச் செய்கைக்கும் இரண்டாவதாக தேயிலை பயிர்ச்செய்கைக்கும் பின்னர் றப்பர் பயிர்ச்செய்கைக்குமென தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தோட்ட தொழிலாளார்களுக்கு இன்றுடன் இருநூறு வருடங்கள்…