
இற்றைக்கு 153 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 18, 1871 இல், பாரிஸ் கம்யூன் உருவாகியது. அதனையடுத்த இரண்டரை மாதங்களுக்கு, வரலாற்றில் முதற் தடவையாகத் தொழிலாளர்கள் இரண்டரை மில்லியன் மக்களை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தனர்.

இந்தச் சில வாரங்களுக்குப் பின்னர் அவர்கள் இரத்தத்தில் மூழ்கியமை முதலாவது கம்யூன் அனுபவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சக்தி என்னவாக இருக்கும் என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.