https://www.change.org/p/withdraw-the-court-case-against-22-plantation-workers-in-sri-lanka வெளியீட்டிற்கான அறிமுகம் இலங்கையில் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (PWAC) நாட்டின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்திலுள்ள மஸ்கெலியாவில் உள்ள சாமிமலையின் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கை விலக்கிக்கொள்ளக் கோரும் மனுப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. நாளாந்த சம்பளம் 1,000 ரூபா கோரி தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அவர்களின் வகிபாகம் சம்பந்தமாகவும் நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்தமைக்காகவும் அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கு ஒரு சோடிக்கப்பட்டதாகும். மனுவில் தேவையான பிற விபரங்களுடன் உங்கள் கையொப்பத்தை இடுமாறும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். கனம்! திரு. சஞ்சய் இராஜரட்ணம், சட்டமா அதிபர், இல.159, புதுக்கடை, கொழும்பு-12 அன்பின் ஐயா, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம்…