நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்…

மார்க்ஸ் ஒரு பாணியைக் கடைப்பிடித்தார் . அவர் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்பட்ட அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார் . அதை தொழிலாளர்களால் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார் . பிறகு பார்வையாளர்களைக் கேள்வி கேட்கச் சொல்வார் . யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் , பார்வையாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிடக்கூடாது , புரிதலில் எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது என்பதற்காக , பார்வையாளர்களைக் கேள்வி கேட்டுப் பரிசோதித்துக் கொள்வார்.

அவரது இந்தத் திறமை பற்றி நான் வியப்புத் தெரிவித்தபோது , தோழர்கள் அவர் ஏற்கனவே பிரஸ்ஸல்ஸில் தொழிலாளர் கழகத்தில் இதுபோன்று உரையாற்றி இருப்பதாகச் சொன்னார்கள் . எவ்வாறாயினும் , ஒரு நல்ல ஆசிரியனுக்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருந்தன . உரைகளின்போது அவர் கரும்பலகையைப் பயன்படுத்துவார் . அதில் அவர் பல சூத்திரங்களையெல்லாம் எழுதிப் போட்டு விளக்குவார் . எங்களுக்கு விளக்கியுள்ளார் .

– கார்ல் லீப்னிஹ்ட்

( நூல்: நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் )

Loading