2022 ஏப்ரல (VOL. 02 – தொகுதி 04)
ஊடக சுதந்திரம் குறித்து ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் முந்தைய சம்பவங்களின் பின்தொடர்வுகள் தொடர்பில் சுருக்கமான முறையில் கண்காணித்து இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் புதிய சட்ட உருவாக்கம், சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் அது தொடர்பான முன்மொழிவுகளுக்கான தேசிய மற்றும் சர்வதேச கருத்துகள் போன்றவற்றிலும் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது. ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக உரிமைகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகச் சுதந்திர ஊடக இயக்கம் தேர்ந்தெடுத்துள்ள பகுதிகூறுகள் மற்றும் நோக்கங்களுக்கு அமைய 26 நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் ஏப்ரல் 2022 அறிக்கையில் உள்வாங்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவற்றில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் தொடர்பான 9 சம்பவங்கள், சட்டவிதி முறைகள் அல்லது சட்டரீதியான கட்டுப்பாடுகள் தொடர்பான 9 சம்பவங்கள் ,ஊடக சுயாதீனத்துவம் தொடர்பான 01 சம்பவம் மற்றும் கட்டமைப்பு ரீதியான விதிமுறைகள் தொடர்பான 07 சம்பவம் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.
