By Raju Prabath Lankaloka
உலகமயமாக்கல், புதிய சந்தை வாய்ப்பு போன்ற வார்த்தைகளைப் போலியாகப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் தங்கள் ஆதிக்கத்தை மற்ற நாடுகளில் திணிப்பதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஏகாதிபத்தியம் எனப்படும் செயல்முறையைக் குறிக்கவே முதலாளித்துவ முறையானது இந்த பல்வேறு போலியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில் போட்டித்தன்மைக்கு முன்னுரிமை அளித்த முதலாளித்துவம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் போட்டித் தன்மையினை ஏகபோகங்களுக்கு முன்னுரிமையளிக்கும் விதத்தில் மாற்றியமைத்து வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. பன்னாட்டு நிறுவனங்களாக, இந்த ஏகபோகங்கள் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் இயங்குகின்றன. இத்தகைய ஏகாதிபத்திய முறைகள் காணப்படுகின்ற நாடுகளில் உள்ள அரசுகள் இந்த ஏகாதிபத்தியங்களின் இலாபத்தை அதிகரிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இன்று உலகில் காணப்படுகின்ற நிதி வலையமைப்பும் நிதி நிறுவனங்களும் கூட அதற்காகவே இயக்கப்படுகின்றன. இன்று உலகில் நடக்கும் பல போர்களுக்கும், வர்த்தகப் போர்களுக்கும், மோதல்களுக்கும் முக்கிய காரணம் இந்த ஏகாதிபத்திய கொள்ளையின் தேவைதான். ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பிரச்சினை, உக்ரேனில் உள்ள மோதலில் இருந்து இலங்கை எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் வரை, ஏகாதிபத்தியத்தின வேர்கள் பவியுள்ளன.
முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சியான ஏகாதிபத்தியமானது, உலகில் முதலாளித்துவ அமைப்புக்கு முற்போக்கான பாத்திரம் எதுவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. முதலாளித்துவ அமைப்பு இன்று செய்யக்கூடிய ஒரே விடயம் யாதெனில் மகா பணபதிகளின் இலாபத்தைப் பெருக்குவதற்காக உலகம் முழுவதும் மோதல்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் போர்களை உருவாக்குவது மட்டுமேயாகும். உலகை முற்றுகையிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களை பாதுகாப்பதில் உலக முதலாளித்துவம் ஒன்றுபட்டுள்ளது. மார்க்சிஸ்டுகள் அந்த அமைப்பைத் தூக்கி எறிய வேண்டும் என்று வாதிடுகின்றனர், மேலும் பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய ஒற்றுமையைக் கொண்டுவருவது நமது பணியாகும். எனது மார்க்ஸின் “அனைத்து நாடுகளின் ப்ரோலிடேரியேட், ஒன்றுபடுங்கள்” என்ற பெருமைக்குரிய வேண்டுகோளுக்கு நமது பதில் அதுவாக இருக்க வேண்டும்.