இனவெறி, மதவெறி மற்றும் ஊழல் நிறைந்த ராஜபக்க்ஷ ஆட்சியை இலங்கை மக்கள் விரட்டியடித்தனர். நூறு நாட்களுக்கும் மேலான மக்களின் தொடர் போராட்டத்தினால் இந்த அரசு விரட்டியடிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் திரிபுபடுத்தப்பட்ட விளைவாக புதிய ஜனாதிபதியின் நியமனம் தற்போதுள்ள பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் ராஜபக்க்ஷ ஆதரவாளர்கள். ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் தனக்கென தனி ஆசனத்தை மட்டும் வைத்துக் கொண்டு தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ஷ ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த அவர் பாராளுமன்றத்தில் 134 வாக்குகளைப் பெற்று 21 யூலை 2022 அன்று இலங்கையின் 8வது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதியாகப் பதிவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் 22 யூலை 2022 அன்று அதிகாலையில் கொழும்பு, காலிமுகத்திடலில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதலை ஆரம்பித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் பொலிசாரின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை ஆசியா கம்யூன் முற்றுமுழுதாகக் கண்டிக்கிறது.
இலங்கையின் ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கை கொள்வது மிகவும் கடினம் என்பதை சர்வதேச சமூகத்திற்குப் பிரகடனப்படுத்தி அதனை உறுதிப்படுத்துகிறோம்.
ஆசியா கம்யூன் சார்பாக: