உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் . உலகம் முழுவதும் மரணம் , மரணம் , மரணப்பயத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது . கோவிட் 19 பேரிடர் வைரசின் அலை பரவலால் மக்கள் தொடர் முடக்கங்களுக்கு உள்ளாகி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உலகம் முழுவதும் பட்டினி நிலை உருவாகியுள்ளது . கடந்த 250 வருடங்களாக உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார முறைமையின் தோல்வியோ இவற்றுக்கு முழுமையான காரணம் . முதலாளித்துவத்தில் மனிதானிமானம் இல்லை . அது முழு உலகத்தையும் மரணத்திலும் , பட்டினியிலும் தள்ளி இலாபம்பார்க்கின்றது . இந்த நிலையில் தான் இலங்கை மக்கள் கொதிநிலையின் இருக்கின்றார்கள் . வாக்குப்போட்ட கட்சிகளின் மீதுமட்டுமல்லாமல் , செயலிழந்து நகரமுடியாமல் உள்ள அரச கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கயிழந்து விட்டார்கள் . கட்சி அரசியல்வாதிகள் , கிரிமினல்குற்ற…