உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் .

உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் . உலகம் முழுவதும் மரணம் , மரணம் , மரணப்பயத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது . கோவிட் 19 பேரிடர் வைரசின் அலை பரவலால் மக்கள் தொடர் முடக்கங்களுக்கு உள்ளாகி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உலகம் முழுவதும் பட்டினி நிலை உருவாகியுள்ளது . கடந்த 250 வருடங்களாக உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார முறைமையின் தோல்வியோ இவற்றுக்கு முழுமையான காரணம் . முதலாளித்துவத்தில் மனிதானிமானம் இல்லை . அது முழு உலகத்தையும் மரணத்திலும் , பட்டினியிலும் தள்ளி இலாபம்பார்க்கின்றது . இந்த நிலையில் தான் இலங்கை மக்கள் கொதிநிலையின் இருக்கின்றார்கள் . வாக்குப்போட்ட கட்சிகளின் மீதுமட்டுமல்லாமல் , செயலிழந்து நகரமுடியாமல் உள்ள அரச கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கயிழந்து விட்டார்கள் . கட்சி அரசியல்வாதிகள் , கிரிமினல்குற்ற கும்பல் தரகு முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு சக்திகள் சமூகப் போராட்ட சத்திகள் , தொழிற்சங்கங்கள் , சிவில் அமைப்புக்கள் மீது ஏறிமிதித்து , முற்றும் முழுதான ஆதிக்கம் செலுத்தி வருகிறது . பயங்காரவாத பீதியை கிளப்பி சிறுபான்மை மக்களுக்கெதிராக அடக்கு முறை . பெருந்திரளான கண்கானிப்புக்களை ஏவி விடப்பட்டுள்ளது . மக்களின் எதிர்ப்பினைக் கட்டுப்படுத்த அரச இயந்திரம் அடக்கு முறையை ( பொலீஸ் , இராணுவம் , நீதித்துறையை பயன்படுத்தி ) முறையற்ற முறையில் பயன்படுத்துகின்றது . எனவே நாட்டின் பொய் தேசியவாதம் , இனவாதம் , மதவாதம் , சாதிவாத்தில் மூழ்கி தனித்தனியாக இயங்கும் மக்கள் கூட்டத்தை ஒன்றிணைத்து தொழிலாளர் வர்க்க அதிகாரக்கட்டமைப்பை ஏற்படுத்தும் செயல்பாட்டை நேர்மையாகவும் , வெளிப்படையாக இயங்கும் இடதுசாரி கட்டமைப்பின் அவசியம் காலத்தின் கட்டாயமாகியுள்ளது . இலங்கையில் மட்டும்மல்லாமல் உகலாவிய ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்க அதிகார அமைப்பை கட்டியமைக்கும் தேவையில் ஏசியன் கொமின் பங்களிப்பை செய்யுமென என நாம் நம்புகின்றோம் . இச்செயல்பாட்டுடன் இவ் ஒன்றிணைவுப்புக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன் இக் கட்டமைப்பை பலப்படுத்த எமது ஒத்துழைப்பை வழங்குவோம் .

செவ்வணக்கம் நடராஜா தேவகிருஷ்ணன்

அகில இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் .

Loading