By Sevvilam Parithi. தமிழ்நாட்டின் எல்லா இடங்களையும் சார்ந்தச் சாதாரண தோழர்கள் ,முக்கிய தோழர்கள், தியாகிகள் பற்றி கண்டிப்பாக விவரமாக எழுத வேண்டும். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைவதற்கு மூல புருஷர்களாக இருந்தவர்கள் என்று தனது ஆவலைக் கூறிய தோழர் சி.எஸ். சுப்பிரமணியம், *என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்னைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்பது எனது கொள்கை * என்று கூறி தம்மைப் பற்றி தகவல் எதுவும் தராதவர். தன்னடக்கம் காரணமாகவே அவர் தன்னைப் பற்றிய தகவல் தர மறுத்துவிடுவார். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்த இவரது தந்தை சுந்தரம் அய்யர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர். பின்பு சென்னை சைதாப்பேட்டைக்கு மாறுதலில் சென்றார். 1910 ஆம் ஆண்டு டிசம்பர்…
![]()