மற்றெந்த நாடுகளுக்கும் இல்லாத சிறப்புகள் இதற்கு உண்டு. பல்வேறு மதங்கள் சார்ந்த மக்கள், பல்வேறு இனங்களை சார்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் என்று பூக்கள் தொடுத்த சரம் போன்று, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பிணக்கில்லாது பல்லாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருந்த பூமி இது. இதன் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்றுத் தொன்மை மிக மிக நெடியது. மத சுதந்திரமும், மத மறுப்பு சுதந்திரமும் கொண்ட நாடு இது. இதை மதச் சார்பற்ற நாடு என்று அழைத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் – அந்த எண்ணத்தை மேம்படுத்தவும், வலுவாக்கவும், வேற்றுமைகளின் நடுவே மக்கள் ஒற்றுமையான சகவாழ்வு வாழவும் ஏராளமான விதிகளை நிறுவியிருக்கிறது. எனவே ‘இந்தியா’ என்கிற கருத்தாக்கம் உலகின் எல்லா நாடுகளையும் விருப்புடன் வியப்புடன் ஏறிட்டு நோக்கச் செய்கிறது. இந்தப் பூமாலையை சிதறடிக்க – பிய்த்து உதற – மக்களிடையே, சாதி…
![]()