சாதியம் / மக்கள் எழுச்சி / SATHIYAM
அக்டோபர் 20, 2021 –பேராசிரியர் விஜய் பிரசாத் Homeகண்ணோட்டம்ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை (இந்திய சமூக விஞ்ஞான கழகம், சென்னை சார்பில் 24.09.2021 அன்று மாலை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கமான தமிழ் வடிவம்) நண்பர்களே! தோழர்களே! இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் சில ஆண்டுகள் நான் வாழ்ந்தேன். கடைசியாக சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிலரங்கம் சம்பந்தமாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ஆய்வாளரும் ஆன பி. சாய்நாத் அவர்களோடு பங்கு பெற்றேன். அன்று மாலை நடைபெற்ற இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் கூட்டம் ஒன்றிலும் பங்கு பெற்று பேசினோம். அந்த நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் சாய்நாத் உடன் இருக்கும்…
உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் . உலகம் முழுவதும் மரணம் , மரணம் , மரணப்பயத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது . கோவிட் 19 பேரிடர் வைரசின் அலை பரவலால் மக்கள் தொடர் முடக்கங்களுக்கு உள்ளாகி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உலகம் முழுவதும் பட்டினி நிலை உருவாகியுள்ளது . கடந்த 250 வருடங்களாக உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார முறைமையின் தோல்வியோ இவற்றுக்கு முழுமையான காரணம் . முதலாளித்துவத்தில் மனிதானிமானம் இல்லை . அது முழு உலகத்தையும் மரணத்திலும் , பட்டினியிலும் தள்ளி இலாபம்பார்க்கின்றது . இந்த நிலையில் தான் இலங்கை மக்கள் கொதிநிலையின் இருக்கின்றார்கள் . வாக்குப்போட்ட கட்சிகளின் மீதுமட்டுமல்லாமல் , செயலிழந்து நகரமுடியாமல் உள்ள அரச கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கயிழந்து விட்டார்கள் . கட்சி அரசியல்வாதிகள் , கிரிமினல்குற்ற…
ஆசிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் ஏசியன் கம்யூன் என்ற புதிய வலையைத் தொடங்குவது சரியான நேரத்தில் அவசியமாகும். ஆசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், புதிய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் அந்தக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு வழிகளில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டங்களில், அவர்கள் வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறார்கள். இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் ஒரே விதமான அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர், ஒரு வழியில் முதலாளித்துவ நாடுகளிலும் மற்றொரு வழியில் மூன்றாவது உலக நாடுகளிலும். இவற்றில், மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை பயங்கரமானது. இலங்கையிலும், ஜனநாயகப் போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட இடம் முறையாக ஒழிக்கப்பட்டு வருகிறது. இன்று, அரசாங்கம் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. பொருட்களின் உற்பத்தி கட்டுப்பாடு, பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் ஆகியவை நிறுவனங்களின் கைகளில் உள்ளன. நாட்டின் தேசிய வளம் அந்த நிறுவனங்களின்…
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்தும், எரிவாயு மற்றும் பொருட்களின் விலையுயர்வு தொடர்பாகவும் உரிமைகளிற்கான பெண்கள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகச் சந்திப்பின் போது அதன் தலைவி சரோஜா சாவித்திரி போல்ராஜினால் நிகழ்ததப்பட்ட உரை. https://www.facebook.com/umashanika/videos/394730388778733
ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மற்றும் பாரபட்சப்படுத்தப்படும் ஆசிய மக்களின் சமத்துவத்திற்கான; சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான; முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் இவற்றிற்கு எதிரான முற்போக்கு, சமூக, கலாச்சார, சுற்றாடல், அரசியல் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கும் சமூகமே ‘ஆசிய கொம்யூன்’ ஆகும். சகல ஒடுக்குமுறை, சுரண்டல் மற்றும் பாகுபாட்டுக்கு எதிரான மக்களின் போராட்டங்களுடன் நாமும் தோளோடு தோள் கொடுத்து இணைந்து நிற்கிறோம். முற்போக்கான சமூக, சுற்றாடல், கலாச்சார மற்றும் அரசியல் முன்னணிச் செயற்பாட்டாளர்கள், பிரச்சாரத்திற்காகத் தங்கள் அனுபவங்களையும், முன்னோக்கிய பார்வைகளையும் தங்களிடையே பகிர்ந்து கொள்வதற்கும், அவரவர் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைக் கூர்ந்து அவதானிப்பதற்கும் ஒரு மேடையை அமைத்துக் கொள்வதே கொம்யூனின் இலக்காகும். ஒன்றுபட்ட மக்களின் கவனத்திற்குரிய போராட்ட உணர்வுடன்செயற்படும் அடிமட்ட செயற்பாட்டாளர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பரஸ்பரம் அவர்கள் தங்களிடையே புரிந்து கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை இந்த கொம்யூன் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.