Siraj Mashoor 21ம.நே · ‘அரகல பூமிய’ (Aragala Bhoomiya) மக்கள் போராட்டக் களத்திற்குள் (அரகல பூமிய) நுழைந்ததும், “அபி பbயய்த?” என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “நே…நே…” என்று சுற்றியிருப்போர் உரத்துச் சொல்கின்றனர்.(“நமக்குப் பயமா?” “இல்லை இல்லை…”) ஜனாதிபதி செயலகத்தைச் சூழவும், காலிமுகத் திடலிலும் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராட்டக் களம், முக்கியமானதொரு அரசியல் எதிர்ப்புணர்வு வடிவம். அதை ராஜபக்ஷ கம்பனி குறைத்து மதிப்பிட்டு விட்டது என்பதுதான் அவர்களது வரலாற்றுத் தவறு. அங்கிருப்போருள் பெருந்தொகையானோர் இளைய தலைமுறையினர். தங்களது எதிர்காலம் சூறையாடப்பட்டு விட்டது என்ற தார்மீகக் கோபம்தான் அவர்களைத் தூண்டி விட்டது. அடங்க மறுக்கும் கலகக் குரல் அது. சிலர் இதன் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டனர். ஆனாலும், படிப்படியாக நாட்டு மக்களது ஒட்டுமொத்த எதிர்ப்பின் திரட்சியாக இது வளர்ந்து வந்தது. ஊடகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் அதிக…