22. 07. 2022 ஊடக அறிக்கை போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் – சுதந்திர ஊடக இயக்கம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள்,அதாவது இன்று (22.07.2022) அதிகாலைக் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மனிதாபிமானமற்ற மற்றும் அருவருப்பான தாக்குதலைச் சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. குறித்த சம்பவங்களைத் அறிக்கையிட்டுக் கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது கமெரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சேதங்கள்குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. காலிமுகத்திடல் போராட்டக்களத்திற்கு நுழையும் அனைத்து வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளதால், இன்று காலையில் கூட ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதகுருமார்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தினர் மீதும் ராணுவத்தினர் கொடூரமாகத் தாக்குதல்…
![]()