By Raju Prabath Lankaloka உலகமயமாக்கல், புதிய சந்தை வாய்ப்பு போன்ற வார்த்தைகளைப் போலியாகப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் தங்கள் ஆதிக்கத்தை மற்ற நாடுகளில் திணிப்பதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஏகாதிபத்தியம் எனப்படும் செயல்முறையைக் குறிக்கவே முதலாளித்துவ முறையானது இந்த பல்வேறு போலியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில் போட்டித்தன்மைக்கு முன்னுரிமை அளித்த முதலாளித்துவம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் போட்டித் தன்மையினை ஏகபோகங்களுக்கு முன்னுரிமையளிக்கும் விதத்தில் மாற்றியமைத்து வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. பன்னாட்டு நிறுவனங்களாக, இந்த ஏகபோகங்கள் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் இயங்குகின்றன. இத்தகைய ஏகாதிபத்திய முறைகள் காணப்படுகின்ற நாடுகளில் உள்ள அரசுகள் இந்த ஏகாதிபத்தியங்களின் இலாபத்தை அதிகரிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இன்று உலகில் காணப்படுகின்ற நிதி வலையமைப்பும் நிதி நிறுவனங்களும் கூட அதற்காகவே…
![]()