நியாயமான கூலி, பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் தொழிலாளர் கண்ணியத்திற்காக உலகெங்கிலும் தீவிரமாகப் போராடிய தொழிலாளர்களின் போராட்டங்களையும் அவர்களின் வெற்றிகளையும் இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் கௌரவிக்கிறோம். மே தினம் என்பது கடந்த கால வெற்றிகளை கொண்டாடுவது மட்டுமல்ல, உலகளாவிய பணியிடங்களில் சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கான ஓர் அழைப்பாகும். 2025 ஆம் ஆண்டில், தன்னியக்கமயமாக்கல், நிரந்தர வருமானமற்ற பொருளாதாரத் தொழில்கள், அதிகரிப்பற்ற சம்பளம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை தடைசெய்வது போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். பல நாடுகளில் அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டான பேரம்,பணியிடப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புக் குறித்தான அக்கறையின்மையால் தொழிலாளர் உரிமைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அதேவேளை, மில்லியன் கணக்கானோர் இன்னும் அடிப்படை உரிமைகள் அல்லது பாதுகாப்பு இல்லாமல் முறைசாரா துறைகளில் பணிபுரிகின்றனர். ஆயினும், ஒற்றுமை உணர்வு தொடர்கிறது. வாழ்க்கை ஊதியத்திற்கான வேலைநிறுத்தங்கள் முதற் கொண்டு…