கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜெர்மன் நாட்டின் ரைன்(RHINE) மாகாணத்தில் உள்ள ரிறியர்(TRIR) என்னும் ஊரில் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி பிறந்தார். அவர் ஒரு பிரஷ்யா-ஜெர்மன் தத்துவவாதி, சமூகவியலாளர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் பத்திரிகையாளர், மொழியியலாளர், பொதுநபர், வரலாற்றாசிரியர். கம்யூஸ்ட் கட்சி அறிக்கை(1948 பிரெட்ரிக் ஏங்கல்சுடன் இணைந்து எழுதியது) மற்றும் அரசியல் பொருளாதாரம்(1867-1883) பற்றிய ‘மூலதனம்’ விமர்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற அவரது படைப்புக்கள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் தத்துவம் என்பவை அடுத்தடுத்த அறிவார்ந்த பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பொது வர்க்கங்களின் நலன்களின் முரண்பாடுகளால் ஏற்படும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக மனித சமூகம் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார். உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்களுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையேயான மோதல்தான் கூலிக்கு…
![]()