நீதி வென்றது!

நீதி வென்றது!
மூத்த வழக்கறிஞர்
தோழர் திருமலைராஜன் குழுவினருக்கு நன்றி!!
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பாராட்டு!!!
———————————————————————
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்.

கந்துவட்டிக் கொடுமை கொடிகட்டிப் பறக்கிற முதல் வரிசை ஊர்.

கடன் வாங்கிய தாயும், மகளுமான அப்பாவி ஏழைப் பெண்களைப் பாலியல் கொடுமை செய்து, ஆபாசப் படமெடுத்து, இணையத்தில் பதிவேற்றுகிறது கந்துவட்டிக் கும்பல்.

இந்த அநீதியைத் தட்டிக் கேட்கிறான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழன் வேலுச்சாமி.

போலீசில் புகார் தருகிறான்.

ஆத்திரம் கொண்ட கந்துவட்டிக் கும்பல், திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது.

தோழர் வேலுசாமியின் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,

மறுபுறம், மூத்த வழக்கறிஞர் தோழர் திருமலைராஜன் அவர்களை, நீதிமன்றத்தின் துணையோடு, அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஏற்பாடு செய்தார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

பணபலம், அதிகார பலம், கொலைமிரட்டல் என்று சகல அஸ்திரங்களையும் தவிடுபொடியாக்கி,

தோழர் திருமலைராஜன் அவர்கள் அயராமல் உழைத்து, (அவருக்கு வயது 80)

நீதியை நிலைநாட்டி இருக்கிறார்.

ஐந்து குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உள்ளிட்டு, குற்றமிழைத்த அனைவருக்கும் தண்டனை வாங்கித் தந்துள்ளார்.

மாணவப் பருவத்தில் இருந்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும்
அவருக்கும், உறுதுணையாக இருந்த குழுவினருக்கும்,

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு ஈரோடு மாவட்டத்தின் சார்பில், அவருடைய வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டுக்களைத் தெரிவித்தோம்.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரையும் தனக்கு தோழர் துரைராஜ் துவக்கத்தில் இருந்து, தொடர்ச்சியாக ஒருங்கிணைத்துத் தந்தார் என்று தோழர் திருமலைராஜன் அவர்கள் சொன்னது குறிப்பிடத் தக்கது.

Loading