By koththigoda
ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரை “நல்லாட்சி அரசாங்கத்தால்” அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். பொலிஸார், முப்படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன இருந்தார். 2015 மற்றும் 2019ற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமையால் பிரஜாவுரிமையை இல்லாது செய்ய வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்தது. ஆனால் கோட்டா ரணிலைப் பிரதமராகப் பரிந்துரைத்தார். ரணில் இறுதியாக கோட்டாவின் 69 இலட்சத்தின் ஜனாதிபதியானார்.
“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” (TRC) என்ற ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மறுநாள் தெரிவித்தார். “இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது ஜனாதிபதியின் நோக்கமல்ல” என்பதாலேயே இவ்வாறான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வளவு அழகான கதைகளை நான் கேட்பது இது முதல் முறையல்ல, இறுதி முறையாகவும் இருக்க முடியாது. ஏனெனில் 1977 முதல் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் என்ன செய்தன என்பதை நாம் நன்கு அறிவோம்.
அத்துடன், ஏகநாயக்க அவர்களின் சிவில் சமூகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில், அனைத்து சிங்களவர்களின் இதயங்களையும் அமைதிப்படுத்துவதன் உண்மையான நோக்கத்தையும் அவர் கூறினார். அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், ஒரு நாடு என்ற வகையில், வருடம் முழுவதும் ஜெனீவா சாட்சி கூண்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.” என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானபோது ஐக்கிய தேசியக் கட்சி 6/5 என்ற அதிகாரத்தை பெற்றது. இந்த நேரத்தில், திறந்த பொருளாதாரத்திற்கு செல்ல நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தப் புரட்சிக்கு மக்கள் எதிர்ப்பின் எழுச்சியை முன்னறிவித்த ஜே.ஆர், இனவாத அடிப்படை சக்திகளை வீதிக்கு அழைத்தார். இவ்வாறு அழைக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய லும்பன் படைகள் எதிர்க் கட்சிகளைத் தாக்கி, கற்பழிப்பு, கொள்ளை, தீ வைப்பு, வெற்றியைக் கொண்டாடி, நாடு முழுவதையும் சுமார் ஒரு வார காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர். தமிழ் மக்கள் பெரும்பாலும் ஆயுதமேந்திய குண்டர்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர் 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயுதமேந்திய குண்டர்களால் ஏற்பட்ட அழிவுகளை ஆராய ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.சி. சன்சோனி தலைவராக இருந்ததால், இந்த ஆணைக்குழு சன்சோனி ஆணைக்குழு என அறியப்பட்டது. பாரம்பரியமாக, ஒரு ஆணைக்குழு அதன் தலைவரின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. இதற்கமைய இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முதலாவது ஆணைக்குழு சன்சோனி ஆணைக்குழுவாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்களால் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், இன, மத பேதங்களைக் கடந்து ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது. பல இறப்புகள் மற்றும் காயங்கள் வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களால் ஏற்பட்டதாக சான்றுகள் காட்டுகின்றன. இந்தக் குற்றங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது, மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் தமிழர்களைத் தாக்க குண்டர்களை ஊக்குவித்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.
எனவே, அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் சன்சோனி ஆணைக்குழு இறுதியாக அரசுக்கு பரிந்துரைத்தது. (அரசு சாரா நிறுவனங்களின் அறிக்கைக்கு அமைய கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ற்கும் மேல்.)
“1977 இல், ரணில் விக்ரமசிங்க முதன்முதலில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சி 6/5 அதிகாரத்தைப் பெற்றது.“
1982இல், சன்சோனி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட்ட ஜனாதிபதி ஜே.ஆர், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இது 1982ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, “தண்டனையில் இருந்து விலக்கு அளித்தல் சட்டம்” என அழைக்கப்பட்டது. இந்தச் சட்டம், “அரச ஊழியர் அல்லது முகவர் செய்த எந்தவொரு செயலுக்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக, சட்டப்பூர்வமாகவோ அல்லது வேறு விதமாகவோ, ஓகஸ்ட் 01, 1977 முதல் ஓகஸ்ட் 31, 1977ற்கு இடையில் செய்யப்பட்ட செயல்களில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என அந்த சட்டம் குறிப்பிடுகிறது. பின்னர் இந்த சட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச, ஜனாதிபதியின் விலக்குரிமையைப் பயன்படுத்தி குற்றவாளிகளைப் பாதுகாக்கத் தொடங்கினார். முதன்முறையாக ஒரு ஆணைக்குழுவையும் நியமித்தார். ஜூன் 18, 1991 இல், கொக்கட்டிச்சோலையில் 67 நிராயுதபாணிகளான தமிழ் கிராம மக்கள் கொல்லப்பட்டது மற்றும் 56 பேர் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சிங்கள, தமிழ், முஸ்லியம் ஆகிய மூன்று தரப்பையும் உள்ளடக்கிய அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் அரசாங்கத்தின் சிங்களப் படைகள் நேரடியாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றப் படையினர் மீது வழக்குத் தொடர வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஆணைக்குழு பரிந்துரைத்தது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக, குற்றச் செயலில் ஈடுபட்ட வீரர்கள் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என இராணுவ அதிகாரிகள் அரசுக்குத் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை கொக்கட்டிச்சோலையில் பயங்கரவாத இராணுவத் தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படவில்லை. எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
88-89 காலப்பகுதியில் தான் பிரேமதாச அரசாங்கம் தெற்கில் சிங்கள இளைஞர்களை காணாமல் ஆக்கியது.
சிங்கள மற்றும் பௌத்த குற்றவியல் அரசை ஜனாதிபதியின் விலக்கு அதிகாரத்துடன் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி பிரேமதாஸவினால் நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆணைக்குழு “ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழு” ஆகும். 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி பிரேமதாஸவினால் நிறுவப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற பலவந்தமான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது நகைப்புக்குரிய விடயமாகும். ஏனெனில் 88-89 காலப்பகுதியில் தான் பிரேமதாச அரசாங்கம் தெற்கில் சிங்கள இளைஞர்களை காணாமல் ஆக்கியது.
ஜனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னர், டி. பி. விஜேதுங்கவின் குறுகிய காலத்தில் 03 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்த மூன்று ஆணைக்குழுக்களும் ஜனாதிபதி பிரேமதாசவினால் “ஆட்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது” பற்றி ஆராய நியமிக்கப்பட்டது. ஜனாதிபதிகள் பிரேமதாச மற்றும் விஜேதுங்க ஆகியேரால் நியமிக்கப்பட்ட நான்கு ஆணைக்குழுக்களில் காணப்பட்ட குற்றவாளிகள் பற்றிய ஆதாரங்களும் தகவல்களும் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் காணாமல் போனதை விட வேகமாக எந்த ஆதாரமும் இல்லாமல் காணாமல் போயின.
காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்காத அரசாங்கத்தைக் கண்டிக்கும் வகையில் வடக்கில் உள்ள தமிழ்த் தாய்மார் புகைப்படங்களை ஏந்தி நிற்கின்றனர்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும், பிரதமராகவுதம் பதவி வகித்து, அரச பயங்கரவாதத்தை பரப்பி, பிரஜைகளைக் கொன்று, விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து 17 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். அந்த ஆட்சியின் முடிவில், தாய்மார்கள், மனைவிகள் மற்றும் தந்தையர் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட குடிமக்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு வடக்கு, தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் சித்திரவதை முகாம்களிலும், இராணுவ முகாம்களிலும், ஆணைக்குழுக்களிலும் தேடிக் காத்திருந்தனர். ஆனால் மகிழ்ச்சி இல்லை. வடக்கில் தாய், தந்தை, மனைவிமார் இன்றும் அவ்வாறே இருக்கின்றனர்.
நாடெங்கும் உருவான இந்தப் பெரும் அவலத்துக்குத் தீர்வாக கலைஞர்கள் சிவப்பு மேலாடையைக் கொண்டு வந்தனர் “செல்வம் நிரம்பிய இடம், மகாலட்சுமி இருக்கும் இடம், வெகு தொலைவில் இல்லை, நாமும் அந்த வழியே செல்கிறோம்” எனக் கூறி இரத்த வாசனை வீசும் கடலட்டைகளுடன் சண்டையிட்டு சிவப்பு மேலாடையுடன் மக்கள் இரத்தினபுரி சூரியகந்தவில் ஏறினர்.
இந்த சிறுவர்களை நாட்டிற்கு இல்லாமல் செய்த கொலையாளிகளுக்கு எனது ஆட்சியில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.
அம்பிலிபிட்டிய மாணவர்களின் எலும்புகள் தோண்டப்பட்ட பின்னர், அன்றைய மேல்மாகாண முதலமைச்சர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, சூரிய கந்த புதைகுழியில் இருந்து முழு உலகிற்கும் உறுதியளித்தார். “இந்த பிள்ளைகளை நாட்டிற்கு இல்லாமல் செய்த கொலையாளிகளுக்கு எனது ஆட்சியில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கொட்டும் மழையின் ஓசையுடன் கூடிய கைதட்டல் சத்தத்தை சூரிய கந்த மீண்டும் மீண்டும் கேட்டது.
1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஊழலையும் பயங்கரவாதத்தையும் முறியடிப்போம் என்பது அவரது முழக்கம். “மரண தேசத்திற்கு உயிர் கொடுப்போம்” என டலஸ் வந்தார்.
கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்படவில்லை. குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இராணுவப் படையினர், சந்திரிக்கா வடக்கில் நடத்திய இனப்படுகொலையை போர் என்ற போர்வையில் நீதிமன்றத்தைத் தவிர்த்தனர். சூரிய கந்தயில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் எலும்புகள் மீண்டும் புதைக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் நிர்வாகிகளின் சேலை முந்தானைக்குள் ஒளிந்து கொண்டனர்.
“தேசிய மக்கள் சக்தி என்பது ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய கூட்டணியாகும்.”
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய கூட்டணியான தேசிய மக்கள் சக்தி, அடுத்த அரசாங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது (இதை இந்த எழுத்தாளர் நம்பமாட்டார்). கூடுதலாக, அதன் தலைவர்கள் செயலில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகிறார்கள். மேற்குறிப்பிட்ட அனைத்து உறவுகளும், ஜே.வி.பி.யும் வடக்கில் இனப்படுகொலைப் போரின் முன்னணிப் படையாக இருந்ததால், அவர்களுக்கும் “நிறைவேற்று ஜனாதிபதி அநுரகுமார”விடமிருந்து விலக்கு கிடைக்கும். தமது நித்திய தலைவரை உயிருடன் பொரளை மயானத்தில் புதைத்த “இராணுவ வீரர்களை” அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அரசாங்கத்தால் கூட குறைந்த பட்சம் வெலிக்கடைக்கேனும் அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்தினால் நல்லது.
சூரியகந்த
சூரியகந்தவை கஞ்சியாக்கிய சந்திரிக்கா மாகாண மட்டத்தில் “காணாமல் போனவர்கள் மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டவர்களை விசாரிப்பதற்காக” மூன்று ஆணைக்குழுக்களை அமைத்தார். மத்திய, வடகிழக்கு மற்றும் தென் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஆணைக்குழுக்கள் 1988 ஜனவரி 31ற்குப் பின்னர் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் பலவந்தமான கடத்தல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அதிகாரம் பெற்றன. நவம்பர் 30, 1994 இல் சந்திரிக்கா இந்த ஆணைக்குழுவை நிறுவினார்.
ஆணைக்குழுக்களின் சாட்சியங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண முதலமைச்சர் பேர்சி சமரவீர மற்றும் அவரது மகனும் மற்றொரு உறவுக்கார மகனும், வடமத்திய மாகாண முதலமைச்சர் ஜி.டி.மஹிந்தசோம, அமைச்சரவை அமைச்சர்களான எம்.எஸ். அதிகாரி, எச். ஜி. நெல்சன் ஆகியோர் சித்திரவதை மையங்களை நடத்தியதோடு கடத்தல்களை நடத்தியதாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனுடன், தென்னிலங்கையில் உள்ள பொலிஸ் அத்தியட்சகர்கள், இராணுவம், விமானப்படை, கடற்படை பாதுகாப்புப் படையினர் மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் மனிதக் கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஆணைக்குழுக்கள் முன் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்த போதிலும், மூன்று ஆணைக்குழுக்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக ஜனாதிபதி சந்திரிக்கா உத்தரவிட்டார்.
இவ்வாறு மூன்று ஆணைக்குழுக்கள் மூடப்பட்ட போது, காணாமல் போனோர் மற்றும் பலவந்தமான கடத்தல்கள் தொடர்பான 30,000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 1,681 சம்பவங்களில், ஆணைக்குழு குற்றவாளிகளை ஆதாரங்களுடன் அடையாளம் காண முடிந்தது. 10,000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை.
ஏப்ரல் 30, 1998 இல், சந்திரிக்கா மீண்டும் 1999 ஜனாதிபதித் தேர்தலை நோக்காகக் கொண்டு காணாமல் போனோர் மற்றும் பலவந்த கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக முழு நாட்டையும் உள்ளடக்கிய புதிய ஆணைக்குழுவை நியமித்தார். மனோரி கோகிலா முத்தெட்டுவகம இந்த ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கினார், இதற்கு முன்னர் இருந்த மூன்று மாகாண ஆணைக்குழுக்களின் ஆராயப்படாத முறைப்பாடுகளை விசாரணை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் புதிய முறைப்பாடுகளை ஏற்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.
புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முத்தெட்டுவகம ஆணைக்குழுவின் செயலாளராக இருந்த எம். சி. எம். இக்பால் கூறினார். ஆகவே, திருப்பி அனுப்பப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை, தெற்கில் 16,000, வடக்கு மற்றும் கிழக்கில் 13,000. மேலும், சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அரசியல் அழுத்தத்தின் காரணமாக, வெகுஜன புதைகுழிகள், சித்திரவதை மையங்கள், தனிநபர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை என இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (ஜேடிஎஸ்) அமைப்புக்கு செயலாளர் இக்பால் தெரிவித்தார்.
எனவே, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள சுமார் 200 பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பெயர்கள் மற்றும் அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட குற்றங்கள் அடங்கிய பட்டியல் இடைக்கால அறிக்கையாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சந்திரிக்கா அரசாங்கம் குற்றவாளிகளுக்கு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை வழங்கியதாக முத்தெட்டுவகம ஆணைக்குழுவின் செயலாளர் எம்.சி. எம். இக்பால் ஜே.டி.எஸ்ஸுக்கு தெரிவித்திருந்தார்.
இதற்கு நெருக்கமான உதாரணம் ஜானக பெரேரா. 88-89இல் பிரேமதாச அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தார். அப்போது கர்னலாக இருந்த பெரேரா, குருநாகல் வெஹெர பிரதேசத்தில் சித்திரவதை கூடம் ஒன்றை நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடத்தப்பட்டவர்கள் முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1987இல், ரணில் விக்ரமசிங்கவை உள்ளடக்கிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், “கலவரங்களை அடக்குவதில் அவர் காட்டிய துணிச்சலுக்காக” கேணல் ஜானக பெரேராவை பிரிகேடியர் தரத்திற்கு உயர்த்தியிருந்தது.
ஜானக பெரேரா மீதான குற்றச்சாட்டுகள் சந்திரிக்காவின் ஆணைக்குழுக்களில் உயிர் பிழைத்தவர்களின் சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்கப்பட்டது. மேலும், அவர் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த காலத்தில் 600ற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போனதற்குக் காரணமானவர் என்பது உறுதி செய்யப்பட்டது. முத்தெட்டுவகம ஆணைக்குழுவின் செயலாளர் எம். சி. எம். இக்பால் இந்த அனைத்து உண்மைகளையும் உள்ளடக்கிய அறிக்கையை தயாரித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு அனுப்பினார். எல்லாவற்றையும் படித்துவிட்டு ஜானக பெரேராவை பிரிகேடியர் தரத்திலிருந்து மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தினார்.
அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தி பிரிகேடியராகவும், பொதுஜன முன்னணியின் காலத்தில் மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்ற ஜானக பெரேரா, ஜே.வி.பி.யால் “இராணுவ வீரனாக” கௌரவத்தைப் பெற்றார். “மனிதாபிமானிகள்” எனக் கூறிக்கொள்ளும் டலஸ், வாசுதேவ போன்ற சமசமஜாஜ கம்யூனிசவாதிகள் இந்த அரசாங்கங்களில் ஆடைகளுடன் அமர்ந்திருந்தனர்.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி, பிந்துனுவெவ புனர்வாழ்வு நிலையத்திற்குள் மீது புகுந்த சிங்கள குண்டர்கள் மற்றும் அந்த நிலையத்தின் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள், நிராயுதபாணிகளான 27 தமிழ் கைதிகளை வெட்டிக் கொன்றனர். 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாதச் செயல்களை விசாரணை செய்ய 2001 மார்ச் 8இல் நியமிக்கப்பட்ட “பிந்துனுவெவ ஆணைக்குழு” அதன் முடிவுகளையும் பரிந்துரைகளையும் 2002 இல் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் கையளித்தது. இதற்கமைய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளில் அவர்கள் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் கண்டறிந்தது மற்றும் முகாமின் பொறுப்பாளராக இருந்த இராணுவ லெப்டினன் உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது.
“குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை”
இந்த தீர்மானத்திற்கு எதிராக சிங்கள ஊடகங்கள், சிங்கள இனவாதிகள் என சிங்கள அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆட்சேபனைகளை எதிர்கொண்ட நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் உச்ச நீதிமன்ற அமர்வு “நிரபராதிகள்” என விடுவித்தது. சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சட்டமா அதிபர் தவறியதாக தலைவர் பீ.வீரசூரிய தெரிவித்திருந்தார்.
2001 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் இனப்படுகொலைப் போரை உக்கிரப்படுத்தும் போது “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” என்ற மற்றொரு ஆணைக்குழுவை நியமித்தது. 1981 முதல் 1984 வரையிலான காலப்பகுதியில் (கறுப்பு ஜூலை உட்பட), தமிழர்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள் மற்றும் இத்தகைய அட்டூழியங்களுக்கு வழிவகுத்த உண்மைகளை விசாரிக்கும் பொறுப்பையும் இந்த ஆணைக்குழு கொண்டிருந்தது. வழமைப்போல் பெயர் மாத்திரம் எஞ்சியிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிங்கள ஆயுதமேந்திய குண்டர்கள் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட பட்டியலை வைத்து கொடூரமான தாக்குதல்களை சுமார் ஒரு வாரம் முன்னெடுத்தனர். குறைந்தது 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பெரும்பாலானோர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். சுமார் 500 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழர்களின் 5,000 கடைகள் அழிக்கப்பட்டன. 1,50,000ற்கும் அதிகமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இந்த (ஜுலை) மாதம் கறுப்பு ஜூலை படுகொலை நாற்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறது
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இடம்பெயர்ந்த பலரை கப்பல்களில் ஏற்றி “வடக்கு உங்களுக்கு பாதுகாப்பான பூமி” என வடக்கிற்கு அனுப்பியது. பூர்வீக மண்ணில் அனாதையாக இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வடக்கில் ஆயுதமேந்திய இயக்கங்களில் இணைந்தனர். சந்திரிக்கா இன்னும் மக்கள் பணத்தில் ஓய்வில் இருக்கையில், ரணில் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், கறுப்பு ஜூலை படுகொலை நடந்து இந்த (ஜுலை) மாதத்துடன் நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.
பிரசித்தி பெற்ற பியகம “பட்டலந்த சித்திரவதை முகாம்” குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு “படலந்த ஆணைக்குழு” என அறியப்பட்டது. 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு, சாட்சி விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை 1998 மார்ச் 28 ஆம் திகதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் வழங்கியது.
பட்டலந்த சித்திரவதை முகாம் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரிந்தே நடத்தப்படுவதமாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜே.வி.பி உறுப்பினர் விஜேதாச லியனாராச்சி, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ரணில் மீது குற்றம் சுமத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்தது.
ஆனால் பிந்துனுவெவ சம்பவத்தைப் போலவே, பாதுகாப்புப் படையினர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இன்றும் ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் “பல்வேறு பிழைகள்” காரணமாக நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுகின்றனர்.
அதன் பின்னர் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச, 2009ஆம் ஆண்டு மே மாதம் வடக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை வந்தார். இந்த சந்திப்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பான் கீ மூன் ஆகியோர் போரின் போது “சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான” வாய்மொழி இணக்கத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன்
இதற்கமைய ஐ.நா பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. குழு தனது அறிக்கையை ஏப்ரல் 12, 2011 அன்று பொதுச்செயலாளரிடம் கையளித்ததோடு ராஜபக்ச அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் “போர்க் குற்றங்களாகக் கருதக்கூடிய செயல்களை” செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியது. நிபுணர் குழு இந்த விடயத்தை ஆராய “சர்வதேச சுயாதீன பொறிமுறையை” நிறுவ வேண்டும் என பரிந்துரைத்தது. நிபுணர் குழுவிற்கு மர்சுகி தருஸ்மான் தலைமை தாங்கினார், எனவே குழுவின் அறிக்கை “தருஸ்மான் அறிக்கை” ஆனது.
தருஸ்மன் அறிக்கை வெளியாவதற்கு முன்னரே நிபுணர்கள் குழுவை நியமித்ததால் திகைத்துப் போன ராஜபக்ச அரசாங்கம் 2010 மே மாதம் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (LLRC)” நியமித்தது. ஓகஸ்ட் 2010 இல், ஆணைக்குழு கொழும்பில் தனது அமர்வை ஆரம்பித்ததோடு இராணுவ அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட 140 குடிமக்கள் கருத்து தெரிவிக்க அழைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், 30 தமிழர்கள் மற்றும் ஐந்து முஸ்லிம்கள் தவிர, 105 பேர் சிங்களவர்கள். இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நவம்பர் 15, 2011 அன்று ஒப்படைக்கப்பட்டது, இது பெப்ரவரி 2002 இல் “சமாதான முன்னெடுப்புகள்”ஆரம்பித்த காலப்பகுதியை விசாரிக்கும் பணியை மேற்கொண்டது.
இறுதியில், கற்றுக்கொண்ட பாடமும் இல்லை, எதுவும் பயன்படுத்தப்படவுமில்லை. “நடந்தது ஒன்றுதான்
“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” என்பது “சர்வதேச சுயாதீன பொறிமுறையை” நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு மாத்திரமே பயன்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய அதே காலப்பகுதியில் இலங்கையில் (OISL) மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை நடத்தியது. பின்லாந்து முன்னாள் ஜனாதிபதி மார்டி அஹ்திசாரி தலைமையிலான ஆணைக்குழு, இலங்கையில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டதை மேலும் உறுதி செய்தது. இந்த ஆணைக்குழுவின் முடிவுகளின் அடிப்படையில்தான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தீர்மானங்களை நிறைவேற்றியது.
அந்த பிரேரணை இலங்கையிலும் பெரும் வரவேற்பை பெற்றது. ஏமாற்றும் ஆட்சியாளர்கள் இருந்தபோதிலும், 2021 இல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வெளிநாடுகளில் எதிர்காலத்தில் வழக்குத் தொடர மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக “இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்” (SLAP) நிறுவப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்மையைக் கண்டறியும் விருப்பம் இருந்தால், அதிக செலவு செய்யாமல் செய்ய வேண்டியது, நாட்டில் இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்கள் குறித்து உள்ளுர் ஆணைக்குழுக்கள் தாக்கல் செய்த சாட்சியங்களை இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்குவதுதான்.
1977 முதலாவது ஆணைக்குழுவில் இருந்து ஜனாதிபதிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆணைக்குழுக்களை நியமித்ததாலும், ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமையாலேயே சர்வதேச சமூகம் கூட உள்நாட்டு விடயங்களில் இவ்வாறு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த இரண்டு ஆணைக்குழுக்கள், உடலகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு. இவ்வாறானதொரு சூழலில், 2006 நவம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி நிஷங்க உடலகம தலைமையிலும், ஓகஸ்ட் 15, 2013இல் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இரண்டு புதிய ஆணைக்குழுக்கள் ஜனாதிபதி ராஜபக்சவினால் “தீவிரமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக” நியமிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டு திடீரென உடலகம ஆணைக்குழு நிறுத்தப்பட்டது. ஆணைக்குழுவினால் ஆராயப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியதால் ஆணைக்குழுவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தலைவர் உடலகம தெரிவித்தார். அப்போது, விசாரணை நிறைவு செய்யப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் அறிக்கைகளை ஜனாதிபதி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவர் அவற்றை தனது சால்வையில் மறைத்து வைத்தார்.
ஓகஸ்ட் 2015 இல் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது நாட்டில் “நல்லாட்சி அரசாங்கம்” இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடலகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் இரண்டையும் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை சமர்பித்து உரையாற்றிய ரணில், “இந்த நாட்டில் போர்க்குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றமே நடத்த வேண்டும் என 2014இல் முதன்முதலில் கருத்து தெரிவித்தவர் மஹிந்த ராஜபக்ச தான். அந்த முன்மொழிவுக்கு மஹிந்த ராஜபக்சவை நான் பாராட்டுகிறேன்” என்றார்.
அப்போது அவ்வாறு கூறிய பிரதமர் ரணில், தற்போது நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்றத்தில் 132 பெரும்பான்மையுடன் பலம் பொருந்திய மனிதராக உள்ளார். தேர்தலை ஒத்திவைக்கவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும், நாட்டின் வளங்களை விற்கவும் அந்த அதிகாரத்தை பயன்படுத்துகிறார். அப்படியானால், போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த காலத்தில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணைகளை ஏற்றுக்கொண்ட ரணிலால் ஏன் அந்த பொறிமுறையை ஏற்படுத்த முடியாது? அதற்கு இன்று என்ன தடையாக இருக்கிறது? பாதிக்கப்பட்டவர்களை கொடுமைப்படுத்தி ஆற்றில் தள்ளும் இன்னொரு “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” யாருக்கு வேண்டும்?
ஒன்று தெளிவாக உள்ளது. “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” மேற்குலக முதலாளிகளை சமாதானப்படுத்தவும், அடுத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவும், நாடு பெரிய பொருளாதாரப் படுகுழியில் இருந்தாலும், இயக்கக் குழுவின் உறுப்பினர்களான 13 அடியாட்களின் வயிற்றை நிரப்பவும், தன்னை ஒரு “தாராளவாத” தலைவர் என தனது படைகளுக்கு காட்டவும் இது ஒரு தந்திரம், முரட்டுத்தனமான தந்திரம்.
இலங்கை அரசின் குற்றங்கள் பற்றிய உண்மையை ஒடுக்கப்பட்ட மக்கள் பலமுறை அரச ஆணைக்குழுக்கள் முன் எடுத்துரைத்துள்ளனர். இப்போது அந்த உண்மையை ஆராய்ந்து உறுதி செய்வது மாத்திரமே எஞ்சியுள்ளது. குற்றம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்குவது மாத்திரமே. சிங்கள, பௌத்த இராணுவவாத ஆட்சியாளர்களும் பெரும்பான்மையான எதிர்க் கட்சிகளும் இக்காலத்தில் இது நனவாகாத கனவு என்பதை நிரூபித்துள்ளனர்.
எனவே, அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், நீதிக்காக நிற்கும் மக்கள் அமைப்புகளும், குடிமக்களும் ஒன்றிணைந்து, ரணிலின் தந்திரமான, மோசடியான, ஏமாற்று, பணம் புரளும் உத்தேச ஆணைக்குழுவை ஒரே குரலில் புறக்கணிக்க வேண்டும். தோற்கடிக்கப்பட வேண்டும். “சர்வதேச சுயாதீன பொறிமுறையை” நிறுவுவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல், நாட்டில் இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்கள் தொடர்பாக உள்ளுர் ஆணைக்குழுக்கள் தாக்கல் செய்த சாட்சியங்களை SLAPற்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணிலை வற்புறுத்த வேண்டும்.
இவை புதிய அனுபவங்கள் அல்ல. பண்டாரநாயக்கவின் கொலையை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அடங்கிய ஆணைக்குழு ஆளுநர் ஜெனரல் வில்லியம் கோபல்லாவவினால் நியமிக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் டி.சாமுவேல் பெர்னாண்டோ தலைமையில் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீதிபதி அடெல் யூனிஸ் மற்றும் கானா நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஜிஏ மில்ஸ் ஓடி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் எனப்படும் “ஏமாற்று வேலைகள்” பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்பினால், JDS இணைய செய்திமடலில் “ஆணைக்குழு புராணம்” என்ற 04 கட்டுரைகள் “சன்சோனி ஆணைக்குழு முதல் பிந்துனுவெவ ஆணைக்குழு” வரை ஆராய்ந்துள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான கித்சிறி விஜேசிங்க அந்தக் கட்டுரைத் தொடரின் உரிமையாளர். இந்தக் கட்டுரையில் உள்ள பெரும்பாலான தரவுகளும் தகவல்களும் அந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து எடுக்கப்பட்டவை.
இலங்கையில் பேச்சு சுதந்திரம் மூச்சை முட்டினாலும், நெருப்பின் சூட்டில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு, தூர தேசத்தில் கஷ்டப்பட்டாலும், தோழர் கித்சிறியின் இலங்கை ஆணைக்குழுக்கள் தொடர்பிலான கட்டுரைத் தொடரின் அவரது சொந்த விமர்சனத்துடன் இந்தக் கட்டுரையை முடிப்பது நல்லது என நினைக்கின்றேன்.
“தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் அதிகாரத் திட்டங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டு, அர்த்தமுள்ள சட்ட முறைமையுடன் செயற்படுத்தப்படும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பெயரளவில் பயன்படுத்தவோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கவோ அல்ல, மாறாக அரசியல் அதிகாரத்தின் நோக்கத்திற்காக குறிப்புகளைக் குறைப்பதற்கான குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுடன்,
இந்த ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் வேண்டுமென்றே சட்டத்தின் அடிப்படைக் கொள்கையான பொறுப்புக்கூறலை கைவிட்டன.”
பாதிக்கப்பட்டவர்களே! ஒடுக்கப்பட்டவர்களே! நாளை உங்களுக்கு நீதி கிடைக்காது!
ஞானசிறி கொத்திகொட
பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் ஊடகவியலாளர்
(சுயாதீன எழுத்தாளர்)
– koththigoda