By Raju Prabath Lankaloka
முதலாளித்துவம் மற்றும் அதன் செயற்பாடு தொடர்பான முழுமையான விளக்கம் மாக்சிசத்தினாலேயே வழங்கப்படுகின்றது. தத்துவம் பொருளாதாரம் மற்றும் அரசியல் என்பவற்றின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அவை எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தினை மோசமாக்குகின்றது போன்ற விடயங்கள் மாக்சியத்தில் விபரிக்கப்பட்டுள்ளன. மாக்சிஸ்டுகளாகிய நாம் அற்புதங்கள், அதிர்ச்சிகள் அல்லது அற்புதங்கள் போன்றவற்றை நம்பவில்லை.
மார்க்சியத்திற்கான பொருள்முதல்வாத அணுகுமுறையால், வரலாற்றின் போக்கில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சமூகம் எங்கு செல்கிறது என்பது பற்றிய முடிவுகளை எடுப்பதனை அது எளிதாக்குகிறது. அந்த பகுப்பாய்வின் தெளிவை மார்க்சியத்தைத் தவிர வேறு எந்த தத்துவத்தின் அடிப்படையிலும் பெற முடியாது. ஆகவே, புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான சரியான மார்க்சிய மரபுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம்.