அந்தியூர்..தாண்டி கடம்பூர் மலையில்.. அழகிய வனப்பிரதேச குக்கிராமமான. தாமரைக்கரையில்… ஒரு பழங்குடிமக்களின் பல்கலைக்கழகம் போல் செயல்படுகின்றது… ஒரு அற்புத பழங்குடி மக்களுக்கான. கானகக்குயில்களின் மரக்கூடு..!! அதற்கு “சமூக-விஞ்ஞானப் பயிலரங்கம் கூடம்”! என்று பெயர் சூட்டி…காட்டுக்குள்ளே பல்கலைக்கழகத்தை நடத்துகின்ற தோழர்.வி.பி.குணசேகரன்..! அவருடன் தான் எவ்வளவு அருமையான. சமூக அரசியல் மாற்றாத்தை விளைவிக்கின்ற பெரும் தோழைமைகளும்.. ஆளுமைகளும்…. அவரோடு மார்க்சியகக்கூடுகளை கட்டி வருகின்றனர்.!
அப்படி ஒருநாள் சென்ற வருடத்தில்… தோழர்.பாரதி கிருஷ்ணகுமாரும்.. மேற்குத்தொடர்ச்சிமலையின் பாரம்பரிய கானக வேந்தர்களோடு கலந்துரையாடினார்..!! அங்கேதான்.. எவ்வளவு எழுத்தாளர்கள்..சமூகவிடுதலைக்கூட்டாளிகள்.. சமூக சமத்துவ நீதிகோரும் உரிமைப்போராட்ட பறவைகள்…. சிறகடித்து பறக்கிறார்கள்..மக்களின் அடிமைச்சங்கிலிகளை.. துறக்க வைத்துவிட்டு…. இலகுவாகிப்போகிறார்கள்..!! அங்கே.. தோழர்.டைரக்டர்.எழுத்தாளர்… படைப்பாளி.. பேச்சாளர்.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுடன்.. நாமும் சங்கமம் செய்தோம்.! தோழர்.வி.பி.ஜியின் அன்பும்..வரவேற்பும்… பெரும் அலாதியான அரசியல் அனுபவம் அது..! வற்றாத சமுக விஞ்ஞான அரசியல் மாற்றத்திறௌகான தாகம் தீர்க்க மானுட நேயம் போற்றும் சமூக விடுதலைப்பறவைகள்..தமிழக முழுவதுமிருந்து… பறந்து வந்து தங்கிச்செல்லும்.. பறவைகளின் கானக சரணாலயம்.. அந்தியூர் கடம்பூர் காட்டில் ..தாமரைக்கரை தாலாட்டும் தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூக விஞ்ஞானப்பயிலரங்கம்..!! என்றால் மிகையில்லை.!! வாழ்த்துக்கள்.. தோழர்.வி.பி.குணசேகரன்..! வந்து.. சமுக சிந்து பாடிச் செல்கின்ற..தோழர்.பாரதி கிருஷ்ணகுமாரின்..
புதிய திரைப்படம்..##Rs.2000/-## மிக நேர்மையான சமூக-பொருளாதார விடுதலை கோரும்..அற்புதப்படைப்பு..! இந்தியாவின் நீதிமன்றங்கள் இதுவரை கேட்டிடாத கேள்விகளை.. வக்கீல்.பாலனாக கேட்கிறார்.! இதுவரை.. இந்தீயாவின் பிரதமரோ..உள்துறை அமைச்சரோ..நிதிமந்திரிகளோ. ரிசர்வ் பேங்க் கவர்னர்களோ.. நீதீமன்றத்தின்..அரசியல் சாசன விடுதலையை மறுத்தவர்கள்..மக்கள் அதிகாரத்தை மடைமாற்றியவர்களிடம்..வரலாறு கேட்காத கேள்விகளுக்கு… பதில்கேட்டு.. நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் கேள்வி எழூப்பியுள்ளார்..மானுடனாக. தோழர்.பாரதி கிருஷ்ணகுமார்.! வாழ்த்துக்கள்…தோழர்களே.! இரா.செவ்விளம் பரிதி வழக்கறிஞர். உச்ச நீதிமன்றம்.
30.05.2022