ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது. மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ). மல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர். குருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உரையாடல் பிரதிபலித்தது எனில் அது மிகையல்ல. தலித்…