2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம்திகதி விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது காணி அபிவிருத்தி சட்டத்தின் சீர்திருத்தத்திற்கான இரண்டாம் வாசிப்பு கடந்த வெள்ளி பாராளுமன்றதில் நடைபெற்று நிறைவேறியது. இந்தசட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது விவசாயிகளின் கடன் பிரச்சனை பற்றிய பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிவின்மை வியப்பை தருகிறது. விவசாயிகள் தமது காணிகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் எடுப்பதே அவர்களது கடன் பிரச்சனைக்கு தீர்வு என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்திருந்தார்கள். இந்த சட்டசீர்திருத்தத்தின் பாரதூரமான விளைவுகள் பற்றி சட்ட கூட கலந்தாலோசிக்க காலம் விடாது இச்சட்டம் அவசர அவசரமாக வாக்களிப்பிற்குட்படுத்தப்பட்டு நிறைவேறியது. காணி சீர்திருத்த சட்டமானது ‘அரச மானியக்காணி உரித்தாளர்கள் அரச தலையீடு அற்று தமது காணி உரிமைகளை பெற்று சுயாதீனமாக இயங்க வழிவகுக்கின்றது’…