நாங்கள் யார்?

ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மற்றும்  பாரபட்சப்படுத்தப்படும் ஆசிய மக்களின் சமத்துவத்திற்கான;  சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான;  முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் இவற்றிற்கு எதிரான  முற்போக்கு, சமூக, கலாச்சார, சுற்றாடல், அரசியல்  செயற்பாட்டாளர்களை உள்ளடக்கும் சமூகமே  ‘ஆசிய கொம்யூன்’ ஆகும்.  சகல ஒடுக்குமுறை, சுரண்டல் மற்றும் பாகுபாட்டுக்கு எதிரான மக்களின் போராட்டங்களுடன் நாமும் தோளோடு தோள் கொடுத்து இணைந்து நிற்கிறோம்.

முற்போக்கான சமூக, சுற்றாடல், கலாச்சார மற்றும் அரசியல் முன்னணிச் செயற்பாட்டாளர்கள்,  பிரச்சாரத்திற்காகத் தங்கள் அனுபவங்களையும், முன்னோக்கிய பார்வைகளையும் தங்களிடையே பகிர்ந்து கொள்வதற்கும்,  அவரவர் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைக் கூர்ந்து அவதானிப்பதற்கும் ஒரு மேடையை அமைத்துக் கொள்வதே கொம்யூனின் இலக்காகும்.

ஒன்றுபட்ட மக்களின் கவனத்திற்குரிய போராட்ட உணர்வுடன்செயற்படும் அடிமட்ட செயற்பாட்டாளர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பரஸ்பரம் அவர்கள் தங்களிடையே புரிந்து கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை இந்த கொம்யூன் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

Loading