#பத்திரிக்கை #எழுத்துக்கு #அறம் #சொன்ன #சுதாங்கன்…..! #பத்திரிக்கையாளர்… #சிறந்த #ஊடகவியலாளர்… #சமூகமாற்றத்தை #விரும்பீயவர்.. !!

#ஜுனீயர் #விகடனை… ஆசிரியராய் பொறுப்பேற்று…. முதல்தலைமுறை மாணவப் பத்திரிக்கையாளர்களாய்….. எங்களை… உருவாக்கியதில் முழுப்பங்காற்றிய…. ஜுனியர் விகடன்…. கிராமத்து ஜனங்களையும் படிக்க வைத்த…. ஒரு நல்ல மானுடப் பத்திரிக்கையாளர்…. தோழர்.சுதாங்கன் இறப்பு… பத்திரிக்கை அறம் இழப்பாகும்….! அன்புமலரை கண்ணீரோடு…. அஞ்சலியாய் காணிக்கையாக்குகிறேன்…! தோழர்.சுதாங்கன்…. ஊடகத்தில்… ஜுனியர் விகடனில்…மானுட அறம் சொன்னவர்….! அவர் பெயர் தமிழ் நேயர்களின்…. வாசகர்களின் உள்ளத்தில் என்றும் வாழும்…!! இரா.செவ்விளம் பரிதி (1984-85 ஜுனீயர் விகடன் தேர்வு செய்த… முதல் தலைமுறை மாணவர் பத்திரிகையாளன்)பத்திரிக்கையாளர் சுதாங்கன்…! ஜுனியர் விகடனை…சமூக உளவியல் பத்திரிக்கையாக மாற்றப்படுவதற்கு…. சிறுமை கண்டு சீரூம்… இளம் ரத்தங்களே…..! தேவை என்பதை…. உணர்ந்து இந்தியாவெங்கிலுமிருந்து…..  சமூக சிந்தனைமிக்க பல்கலைக்கழக மாணவ-மாணவியரே…. சரியாய் இருப்பார்கள்….. என்று…. கர்நாடக மாநிலத்தின் ஏகப்பிரதிநிதியாக…. பெங்களுர் சட்டப் பல்கலைக் கழகத்தில்…. இரண்டாமாண்டு சட்ட மாணவனாகிய நான் உட்பட…. சுமார் 45 க்கும் மேற்பட்ட …இந்தியா…மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி லிருந்தும்….. மாணவப் பத்திரிகையாளர் களாகவும்…. Press போட்டோகிராபர்களாகவும்….. செயல்பட… ஆசிரியர் குழுவில்தேர்வு செய்தார்…!!? சமூக அநீதியை வெளிக் கொண்டுவரும்…கொப்பளிக்கும்  எழுத்துக்களை….. சுடச்சுட… வாரம் இருமுறை…. ஜீனீயர் விகடன்….. ஆரம்பத்தில்…. நான்கு டிஜிட்டலிலிருந்து…… ஐந்து டிஜிட்டலுக்கு சர்குலேசன்….உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் கையில் எங்கள் எழுத்துக்களை…. சமூக அவலங்களை…. ஆரம்பத்தில். சிட்டீ கிரைம் நியுஸ்ஸிலிருந்து…. “வாருங்கள் கிராமத்துப் பக்கம்….!” என்று எனது திருவண்ணாமலை தண்டரை கிராமத்து “அத்திப்பட்டுபோல்” புறக்கணிக்கப்பட்ட.. அந்த எளிய மக்களின்…அவலம் நீக்க… “ரோடு தாங்க சுதந்திரம்” என்று தலைப்பிட்டு…  நடுப்பக்கத் தலையங்கக் கட்டுரையாக….போட்டு.. தனியாகவே காலம் ஒதுக்கி…. பெரும்பாய்ச்சலோடு….. கிராமத்து ஜனங்களின் கண்ணீருக்கு….. விடை சொல்ல வைத்த பெருமை…. தோழர்.சுதாங்கனையே சேரும்….! அந்தக்கட்டுரையை எழுத என்னை பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு .. வேட்டவலம் AIYF தோழர்.ஆறுமுகம் வழக்கறிஞர்… மற்றும் நூற்றுக்கணக்கான இளைஞர் மன்றத்தோழர்கள்…. சைக்கிள்களில் என்னை முன்பக்கம்… உட்கார வைத்து…ஒரு ரஷ்யன் கேமிராவை கையில் எடுத்துக்கொண்டு ….மூச்சிரைக்க… வேட்டவலம் டூ திருக்கோவிலூர் பாதையில்… தண்டரைகிராமத்துக்கு….. எட்டுகி.மீ..சைக்கிள்களை தலைமேல் தூக்கிக்கொண்டு போய்.. அந்த மக்களை சந்தித்தபோது…மக்கள் தங்களுக்கு…. விடுதலை கிடைத்ததாகக் கன்னங்களில்..சூடாய் வழிந்த கண்ணீருக்கு..விடை ஜுனீயர் விகடன்….!!? ஜுனியர் விகடன் ஆசிரியராய் உற்சாகப்படுத்திய …. நல்ல சமூக மாற்றத்திற்கான அறம் சொன்ன சிந்தனையாளர் சுதாங்கன் ஆவார்…!! ஆனந்த விகடன்….ஆசிரியர்… S.பாலசுப்பிர மணியம்… துணை ஆசிரியர் பிரபல கார்ட்டூனிஸ்ட்…. மதன்….. சுதாங்கனை….. யாரும் சுலபமாக மறக்கமுடியுமா….!? அதிர்ச்சியளிக்கிறது.தோழர்.சுதாங்கனின் இறப்புச் செய்தி…!! ஆழ்ந்த….. அஞ்சலியை…. கண்ணீர்த் துளிகளோடு….. காணிக்கையாக்குகிறேன்…..! சுதாங்கன் எழுத்தும்…. சொல்லும்.. செயல்வடிவமும்…. பத்திரிக்கை…. பின்னர்….. ஊடகத்தில்….. பெரும் வரலாறு பேசும் சமூகப் புரட்சியாளர்களையெல்லாம் தலைவர்களையெல்லாம்…பேட்டி எடுத்தவர்….!? அதுவே…  முதல்வன்… இந்தியன்….. படத்தில் திரைவடிவமாக தொகுக்கப்பட்ட… காணப்பட்ட….. வெற்றிகரமான….. சமூக உளவியல்… திரைப்படங்களாக… உலகை பேச வைத்தது…!! சுதாங்கன்….. நீ… என்றென்றும் புகழ் ஓங்கிட …எழுத்துக்களில்…. வாழ்கிறாய்…!! ஓய்வற்று தமிழை உழுத உமது எழுத்து சற்று…ஓய்வு கொள்ளட்டும்…!!அஞ்சலி செலுத்துகிறோம்…. 1984-85 முதல் தலைமுறை ஜீனியர் விகடன் மாணவ-மாணவீயர் பத்திரிக்கையாளர்கள் சார்பில்….. மலரஞ்சலி….. #தோழர்.#சுதாங்கன்..!! #இரா.#செவ்விளம் #பரிதி #ஜுனியர் #விகடன் #முதல் #தலைமுறை #மாணவர் #பத்திரிக்கையாளர்.

1984-85 Student Reporters

BY : SEVVILAM PARITHI (ADVOCATE )

ASIA COMMUNE TAMILNADU

Loading

Related posts