Tamil – Asia Commune https://asiacommune.org Equality & Solidarity Thu, 30 Apr 2026 23:06:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://asiacommune.org/wp-content/uploads/2025/08/cropped-you-tube-32x32.jpg Tamil – Asia Commune https://asiacommune.org 32 32 சர்வதேச மார்க்சிய மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறோம்! https://asiacommune.org/2026/04/30/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/ Thu, 30 Apr 2026 23:00:37 +0000 https://asiacommune.org/?p=11805

ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலகத் தொழிலாளர்களின் போராட்டங்களின் வெற்றிக்காகவும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் நடைபெறும் சர்வதேச மார்க்சிய இணையவழி மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறோம்.

மாநாட்டு இணைப்பைப் பெற

https://www.revolucion.org.es/l/we-invite-you-to-the-international-marxist-conference

THE MARX – SRI LANKA

THE MARX – INTERNATIONAL

Loading

]]>
Let us make 2026 the year that ends impunity and triumphs justice! https://asiacommune.org/2026/01/23/let-us-make-2026-the-year-that-ends-impunity-and-triumphs-justice-2/ Fri, 23 Jan 2026 19:49:08 +0000 https://asiacommune.org/?p=11403

Loading

]]>
நினைவு வணக்கம்! https://asiacommune.org/2025/11/09/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ Sun, 09 Nov 2025 15:36:08 +0000 https://asiacommune.org/?p=11095 திருநாவுக்கரசர் வல்லிபுரம்!

நினைவு வணக்கம்!

திருநாவுக்கரசர் வல்லிபுரம்!

நாவுக்கரசர் 

பெயரின் நிகர்த்த

நாவிலே அரசர்.

நேர் பார்வையில்

நிமிராத

பணிவில்

மனதைத் தொடும்

மனித நேயர். 

இரும்பின் கனதியும்

கரும்பின் இனிமையும் 

சொல்லில்

பொருளாய் சுவையாய்

துய்த்த ஞாபகங்கள்

பல.

பார்த்த மாத்திரத்தில்

பண்பால்

பணிய வைக்கும்

பக்குவம் பார்த்து வியந்த பொழுதுகளும்

எத்தனையோ நினைவில்.

நல்லொழுக்கம் எனும்

ஒரு சொல்லில்

ஆளுகை செய்யும்

அன்பாளர்

எனில் மிகையல்ல.

பேச்சில் அளவு கோல் மேலாய்

ஒரு சொல்லும்

பிறளாத

சிறப்பியல்பில் உள்ளம்

உவகையுற்ற

நிகழ்வுள் பல.

அருகருகே வாழ்ந்த

அந்நாளில்

மருந்துக்கும் குரலில்

கனியன்றி

ஒரு காய்ச் சொல்

தொனித்ததில்லை.

கால நீட்சியின் பின்னும்

காணக் கிடைத்த வேளைகளில்

அமுத மொழி கொண்டு

ஆரத்தழுவிய சிலிர்ப்பு

இன்னமும்

உள்ளூறச்

சில்லிடுகினறது.

தன் மகிமை விடுத்து

பிறர் பெருமையில்

இன்புறும்

ஒப்பற்ற அண்ணலுடன்

விருந்துண்ட

வேளைகள்

விளம்பும் தரனற்றவையே.

எழுதிக்கொண்டே

செல்லும்

இயற்கையின்

ஏட்டில்

இன்று உங்கள் பெயர்.

வானுறை தெய்வ 

வரவேற்பாகலாம்.

வருக சென்று!

Loading

]]>
ජීවිතය විදින්න – සරත් මද්දුමගේ https://asiacommune.org/2025/10/22/%e0%b6%a2%e0%b7%93%e0%b7%80%e0%b7%92%e0%b6%ad%e0%b6%ba-%e0%b7%80%e0%b7%92%e0%b6%af%e0%b7%92%e0%b6%b1%e0%b7%8a%e0%b6%b1-%e0%b7%83%e0%b6%bb%e0%b6%ad%e0%b7%8a-%e0%b6%b8%e0%b6%af%e0%b7%8a%e0%b6%af/ Wed, 22 Oct 2025 19:57:39 +0000 https://asiacommune.org/?p=10887 brochure-3fold-a4 (1)Download

Loading

]]>
கைக்கூலியாக மாறிய அரசு! உண்மையை உடைத்த வழக்கறிஞர் | Chennai Sanitary Workers Issue! https://asiacommune.org/2025/10/20/%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89/ Mon, 20 Oct 2025 20:37:20 +0000 https://asiacommune.org/?p=10862

கைக்கூலியாக மாறிய அரசு! உண்மையை உடைத்த வழக்கறிஞர் | Chennai Sanitary Workers Issue

SOURCE:

Loading

]]>
சனாதனம்…. பலமானதேயல்ல… !!  https://asiacommune.org/2025/10/12/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/ Sun, 12 Oct 2025 21:34:09 +0000 https://asiacommune.org/?p=10634 பலமுள்ளதாக… காண்பிக்கப்படுகிற.. சங்கி நாடக ஆட்சிக்கொட்டகையில்.. காசுக்கு பீய்.. திங்கிற.. அடீமைச்சூத்திரக் கோமாளிகளை…நாக்பூர் கார்ப்பரேட்.. இந்தியாவின் 3%சதமேயான…ஆண்டான் பூணுல்களிடம்…தங்களையும் தங்களது  சூத்திரக்கூட்டத்தையும்.. 

தேர்தல் லீசுக்கு…. ஒப்பந்தம் போட்ட.. வியாபாரத்தில்..இந்த தறுதலைகள்.. மில்லியன்ஸ் ஆப் இந்தியர்களை.. இந்துத்துவா கால் நக்கிகளாக… பில்லியன் கருப்புப் பணக்கத்தைகளை.. பெற்றுக்கொண்டு.. கூத்தடிக்கின்ற… So called.. SC/ST லீடர்ஸ் என்று சொல்லிக்கொள்ளுகிற…. கூட்டமே…தங்களுக்கு.. பெரும்பான்மை … எண்ணிக்கைபலத்தை…வைத்து நடக்கின்ற..தேர்தல் சூதாட்ட.த்தில்  ..பகடை உருட்டுகிற சகுனிமாமாவாக…  தேர்தல் எனும் தேராத.  பீத்தை தேர்தல் கமிஷன்.. !! முதலாளித்துவ ஜனநாயகத்தின்…அலங்கோலத்தின்.. உச்சம்.. இந்த சங்கிச்சனாதனா  ..போலிப்பீடை… அதாணி  CEO.. மோடி..அமித்சா.. மானுடதுவேசிகள்.. !! நாடு.. 2026ல்..பேராபத்தை நோக்கி நகருகிறது.. நன்றாகத்தெரிகிறதூ.. !! மரண பயத்தில்… சனாதன Rss.bjpயின் இந்துத்துவா ராஜ்ஜியத்தில் எரிகிற..நா(வீ)ட்டில்.. புடுங்கியவரை…சுயலாபம் .. பார்க்கிற..மதசார்பற்ற அரசியல் சாசன. பணையம் வைத்துவிட்ட…. சந்தர்ப்பவாத.. பாஜக ஆதரவு கொலையாளிகள்.. !!? அது வடநாடு தொடங்கி..கொடநாடுவரை நீண்டிருக்கிறதுர! ! எதற்காக.. அதாணிஅம்பானிகளுக்கு.. பல லட்சம் கோடிகளௌ.. அரசாங்கப்பணம்.. ரைட்ஆப் செய்யப்பட்டது…? அதுயார் கைக்கு..மடைமாற்றமானது.. என்று தெரியாதா.. இந்தியனுக்கு.. ! இதிலே.. RSSBJP தலைமை கட்சிக்கு சொத்துக்களாக.. சில லட்சங்களில் போய்ச்சேர்ந்ததின் விளைவு..இந்தியனுக்கு.. என்னடா..லாபம்.. !? மோடிக்கும்.அமித்சாவுக்கும்.நிர்மலா சனாதன சங்கிகளுக்குத்தான்.. ஏதேனும்….தம்புடி நட்டமுண்டோ…!? 2026 பாஜக Rssக்குமட்டும் வாழ்வா..? சாவா. அல்ல.. !? அந்த மரணபயம்..மோடி இந்துத்துவா கூட்டத்திற்கே உண்டுதானே..!? உள்நாட்டு தேசஒற்றுமைக்கே.. வேட்டு போடவூம்.. செய்வார்களே.. !! அதற்கு.. விலை..சாதாரண இந்தீயரின் உழைப்பூம்.ரத்தமும். !! ? எச்சரிக்கை..எந்நாடே.. !?ஒரு மானமுள்ள இந்தியக்குடிமகன்.. கேவலமான சங்கித்தன இந்து..அல்ல.. !!இரா.செவ்விளம் பரிதி சிட்டிசன் தமிழ்நாடு 13.10.2025

BY SEVVILAM PARITHI (THAMILNADU)

Loading

]]>
காசா – இனப்படுகொலையைக் கண்டித்து https://asiacommune.org/2025/10/03/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3/ Fri, 03 Oct 2025 22:42:22 +0000 https://asiacommune.org/?p=10504

Loading

]]>
தேர்வு மட்டும் தான் தீர்வா?? https://asiacommune.org/2025/09/30/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/ Tue, 30 Sep 2025 20:36:11 +0000 https://asiacommune.org/?p=10442 தேர்வு மட்டும் தான் தீர்வா??

அறிவு சார் ஆன்றோர்களே….தீர்வு காணுங்கள்..

அந்த வருடம்..1997-98. சட்ட பட்டப்படிப்பு தேர்வு… முதலாம் பருவ நிலை..(first semester)

நாங்கள் எண்பது மாணவர்கள் மொத்தம்..

தேர்வு முடிவுகள் வெளிவந்தது.

நாங்கள் எண்பது பேரில் ஆறு பேர் மட்டுமே முழுமையாக தேர்ச்சி பெற்றனர்… மற்ற அனைவருக்கும் அரியர்…

நானும் ஆறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவியுமாக தேர்ச்சி பற்றிய தகவல்கள் அறிய பேராசிரியர்கள் அறைக்கு சென்றோம்..

என்னுடன் வந்த மாணவியிடம் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர்…இதோ பாருங்க (பெயரை அழைத்து) நீங்க எழுதிய ஒரு தேர்வில் வெறும் 20 மார்க் மட்டுமே வாங்கி இருந்தீர்கள்… நான் தற்செயலாக நீங்கள் எழுதிய மை வைத்து (Darquis blue) உங்கள் தேர்வு தாளை அடையாளம் தெரிந்து 44 மார்க் போட்டு பாஸ் செய்தேன் என்றார்..

இதனை கேட்டதும் என் அதிர்ச்சி அளவிட முடியவில்லை… நான் அவரிடம் இது மிகவும் தவறான ஒன்று சார்..

அதுவும் உங்களிடம் இருந்து இந்த அருவெறுப்பாக செயலை எதிர் பார்க்கவில்லை என்றேன்… என் கோபம் அவர் எதிர் பார்க்கவில்லை… மெதுவாக சசிகலா தப்பாக நினைக்காதீர்கள்…நம்ம காலேஜ் மாணவி என்று இழுத்தார்…

சார் நமம மாணவி என்று தெரிந்த உங்களுக்கு ஏன் மற்ற மாணவர்கள் நினைவுக்கு வரவில்லை… இத்தகைய உங்கள் செயல் எங்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று ஏன் தெரியவில்லை… என்ன சொன்னாலும் நீங்கள் செய்தது சீரணிக்க முடியாது சார்… நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு… மரியாதை இவையெல்லாம் விட நம்பிக்கை போயிற்று சார் என்றேன்…

ஆனாலும் அவர் சசிகலா நான் மிகவும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல எனக்கு இன்னும் அதிகமாக கோபம்..

சார் எல்லோரும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படி செய்தது தவறு என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தேன்…

இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் ஆயிற்று என்றாலும் என் மனதில் வேதனை தருகிறது….இது போல் தானே இளம் தலைமுறையினர் கூட இந்த மதிப்பெண் பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்…

சரியான நபர்களின் உண்மையான திறமை மறைக்கப் படுகிறது அல்லது குறைக்கப் படுகிறது…

குறிப்பாக நீட் தேர்வு…

நான் கூறிய பேராசிரியர் இன்று உச்ச பதவியில் இருக்கிறார்..

அவரோடு பேசும் போதெல்லாம் இந்த சம்பவத்தை கூறுவேன்… ஒரு முறை அவர் கேட்டார்… சரி அந்த மாணவியின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்… நான் ஒரு வேளை நீங்கள் குறைவாக மார்க் வாங்கி நான் உங்களை அதிகமாக மார்க் போட்டு பாஸ் செய்தேன் என்றால் என்ன செய்து இருப்பீர்கள் என்றார்..

அப்படி நீங்கள் செய்து எனக்கு தெரிய வந்தால் வினாத்தாள் மறு திருத்தத்திற்கு தருவேன்… இன்னும் அதிகமாக போனால் இந்த படிப்பே வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என்றேன்..

இதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது…

கல்வியாளர்களே… இளம் தலைமுறையினரின் நலம் சார்ந்து எதாவது ஒரு மாற்று கொண்டு வாருங்கள்…

மீள் பதிவு…

By Sashikala Devi Sulaiman –

Tamilnadu India ( Advocate)

Loading

]]>
#பத்திரிக்கை #எழுத்துக்கு #அறம் #சொன்ன #சுதாங்கன்…..! #பத்திரிக்கையாளர்… #சிறந்த #ஊடகவியலாளர்… #சமூகமாற்றத்தை #விரும்பீயவர்.. !! https://asiacommune.org/2025/09/13/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Sat, 13 Sep 2025 14:25:16 +0000 https://asiacommune.org/?p=10157 #ஜுனீயர் #விகடனை… ஆசிரியராய் பொறுப்பேற்று…. முதல்தலைமுறை மாணவப் பத்திரிக்கையாளர்களாய்….. எங்களை… உருவாக்கியதில் முழுப்பங்காற்றிய…. ஜுனியர் விகடன்…. கிராமத்து ஜனங்களையும் படிக்க வைத்த…. ஒரு நல்ல மானுடப் பத்திரிக்கையாளர்…. தோழர்.சுதாங்கன் இறப்பு… பத்திரிக்கை அறம் இழப்பாகும்….! அன்புமலரை கண்ணீரோடு…. அஞ்சலியாய் காணிக்கையாக்குகிறேன்…! தோழர்.சுதாங்கன்…. ஊடகத்தில்… ஜுனியர் விகடனில்…மானுட அறம் சொன்னவர்….! அவர் பெயர் தமிழ் நேயர்களின்…. வாசகர்களின் உள்ளத்தில் என்றும் வாழும்…!! இரா.செவ்விளம் பரிதி (1984-85 ஜுனீயர் விகடன் தேர்வு செய்த… முதல் தலைமுறை மாணவர் பத்திரிகையாளன்)பத்திரிக்கையாளர் சுதாங்கன்…! ஜுனியர் விகடனை…சமூக உளவியல் பத்திரிக்கையாக மாற்றப்படுவதற்கு…. சிறுமை கண்டு சீரூம்… இளம் ரத்தங்களே…..! தேவை என்பதை…. உணர்ந்து இந்தியாவெங்கிலுமிருந்து…..  சமூக சிந்தனைமிக்க பல்கலைக்கழக மாணவ-மாணவியரே…. சரியாய் இருப்பார்கள்….. என்று…. கர்நாடக மாநிலத்தின் ஏகப்பிரதிநிதியாக…. பெங்களுர் சட்டப் பல்கலைக் கழகத்தில்…. இரண்டாமாண்டு சட்ட மாணவனாகிய நான் உட்பட…. சுமார் 45 க்கும் மேற்பட்ட …இந்தியா…மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி லிருந்தும்….. மாணவப் பத்திரிகையாளர் களாகவும்…. Press போட்டோகிராபர்களாகவும்….. செயல்பட… ஆசிரியர் குழுவில்தேர்வு செய்தார்…!!? சமூக அநீதியை வெளிக் கொண்டுவரும்…கொப்பளிக்கும்  எழுத்துக்களை….. சுடச்சுட… வாரம் இருமுறை…. ஜீனீயர் விகடன்….. ஆரம்பத்தில்…. நான்கு டிஜிட்டலிலிருந்து…… ஐந்து டிஜிட்டலுக்கு சர்குலேசன்….உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் கையில் எங்கள் எழுத்துக்களை…. சமூக அவலங்களை…. ஆரம்பத்தில். சிட்டீ கிரைம் நியுஸ்ஸிலிருந்து…. “வாருங்கள் கிராமத்துப் பக்கம்….!” என்று எனது திருவண்ணாமலை தண்டரை கிராமத்து “அத்திப்பட்டுபோல்” புறக்கணிக்கப்பட்ட.. அந்த எளிய மக்களின்…அவலம் நீக்க… “ரோடு தாங்க சுதந்திரம்” என்று தலைப்பிட்டு…  நடுப்பக்கத் தலையங்கக் கட்டுரையாக….போட்டு.. தனியாகவே காலம் ஒதுக்கி…. பெரும்பாய்ச்சலோடு….. கிராமத்து ஜனங்களின் கண்ணீருக்கு….. விடை சொல்ல வைத்த பெருமை…. தோழர்.சுதாங்கனையே சேரும்….! அந்தக்கட்டுரையை எழுத என்னை பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு .. வேட்டவலம் AIYF தோழர்.ஆறுமுகம் வழக்கறிஞர்… மற்றும் நூற்றுக்கணக்கான இளைஞர் மன்றத்தோழர்கள்…. சைக்கிள்களில் என்னை முன்பக்கம்… உட்கார வைத்து…ஒரு ரஷ்யன் கேமிராவை கையில் எடுத்துக்கொண்டு ….மூச்சிரைக்க… வேட்டவலம் டூ திருக்கோவிலூர் பாதையில்… தண்டரைகிராமத்துக்கு….. எட்டுகி.மீ..சைக்கிள்களை தலைமேல் தூக்கிக்கொண்டு போய்.. அந்த மக்களை சந்தித்தபோது…மக்கள் தங்களுக்கு…. விடுதலை கிடைத்ததாகக் கன்னங்களில்..சூடாய் வழிந்த கண்ணீருக்கு..விடை ஜுனீயர் விகடன்….!!? ஜுனியர் விகடன் ஆசிரியராய் உற்சாகப்படுத்திய …. நல்ல சமூக மாற்றத்திற்கான அறம் சொன்ன சிந்தனையாளர் சுதாங்கன் ஆவார்…!! ஆனந்த விகடன்….ஆசிரியர்… S.பாலசுப்பிர மணியம்… துணை ஆசிரியர் பிரபல கார்ட்டூனிஸ்ட்…. மதன்….. சுதாங்கனை….. யாரும் சுலபமாக மறக்கமுடியுமா….!? அதிர்ச்சியளிக்கிறது.தோழர்.சுதாங்கனின் இறப்புச் செய்தி…!! ஆழ்ந்த….. அஞ்சலியை…. கண்ணீர்த் துளிகளோடு….. காணிக்கையாக்குகிறேன்…..! சுதாங்கன் எழுத்தும்…. சொல்லும்.. செயல்வடிவமும்…. பத்திரிக்கை…. பின்னர்….. ஊடகத்தில்….. பெரும் வரலாறு பேசும் சமூகப் புரட்சியாளர்களையெல்லாம் தலைவர்களையெல்லாம்…பேட்டி எடுத்தவர்….!? அதுவே…  முதல்வன்… இந்தியன்….. படத்தில் திரைவடிவமாக தொகுக்கப்பட்ட… காணப்பட்ட….. வெற்றிகரமான….. சமூக உளவியல்… திரைப்படங்களாக… உலகை பேச வைத்தது…!! சுதாங்கன்….. நீ… என்றென்றும் புகழ் ஓங்கிட …எழுத்துக்களில்…. வாழ்கிறாய்…!! ஓய்வற்று தமிழை உழுத உமது எழுத்து சற்று…ஓய்வு கொள்ளட்டும்…!!அஞ்சலி செலுத்துகிறோம்…. 1984-85 முதல் தலைமுறை ஜீனியர் விகடன் மாணவ-மாணவீயர் பத்திரிக்கையாளர்கள் சார்பில்….. மலரஞ்சலி….. #தோழர்.#சுதாங்கன்..!! #இரா.#செவ்விளம் #பரிதி #ஜுனியர் #விகடன் #முதல் #தலைமுறை #மாணவர் #பத்திரிக்கையாளர்.

1984-85 Student Reporters

BY : SEVVILAM PARITHI (ADVOCATE )

ASIA COMMUNE TAMILNADU

Loading

]]>
அமெரிக்க வரி https://asiacommune.org/2025/09/11/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/ Thu, 11 Sep 2025 20:45:43 +0000 https://asiacommune.org/?p=10131

Loading

]]>